அண்ணா சாலையில் உயர்நிலை மேம்பாலம்: அமைச்சர் எ.வ. வேலு ஹைதராபாத்தில் ஆய்வு!
பாங்காக் சாலையில் ஏற்பட்ட மகா பள்ளம்! புகைப்படங்கள்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் விழுந்து மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஹாலிவுட் திரைப்படங்களில் தோன்றும் காட்சி போல, பாங்காக்கில், புதன்கிழமை ஏற்பட்ட இந்த பள்ளம் சுமார் 164 அடி ஆழமும், 900 சதுர மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது.
வஜிரா மருத்துவமனை அருகே நேரிட்ட இந்த பள்ளத்தினால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பள்ளத்தில் விழுந்த வாகனங்களில் இருந்தவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
சாலையில் கழிவுநீர் கால்வாய் பகுதியிலிருந்து தண்ணீர் மேலே எழும்புவதும், பிறகு, அங்கிருந்த மின் கம்பம் உள்ளே இழுக்கப்படுவதும், பிறகு, சாலை உள்வாங்கும் காட்சிகளும் பதிவாகியிருக்கிறது.