No-detention policy scrap: கல்வியின் பொறுப்பை குழந்தைகள் மீது சுமத்துவதா... அரசி...
'பாசிச சக்திகளை அனுமதிக்காத தமிழக மக்களை பாரட்டுகிறேன்' - கிறிஸ்துமஸ் விழாவில் தெலங்கானா முதல்வர்!
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 27-வது கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. புண்ணியம் பகுதியில் இருந்து அருமனை வரை ஊர்வலம் நடைபெற்றது. அதில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் தெலங்கானா முதல்வர் அனுமுலா ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்னிலை வகித்தார். தெலங்கானா முதல்வர் அனுமுலா ரேவந்த் ரெட்டி மேடையில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார். பின்னர் அனுமுலா ரேவந்த் ரெட்டி பேசுகையில், "நமது தலைவர் ராகுல் காந்தி தீய சக்திகளை எதிர்க்கிறார். அவர் உண்மையான அன்பையும், கிறிஸ்தவத்தினுடைய தன்மையையும் பிரதிபலிக்கக் கூடியவராக இருக்கிறார். உங்கள் அனைவருக்கும் தெரியும் ராகுல் காந்தி அவர்கள் பாரத் ஜோடோ யாத்திரையை இந்த கன்னியாகுமரி மண்ணில் இருந்து தொடங்கினார். இந்த மண்ணிற்கு சொந்தக்காரர்கள் நீங்கள். கேரள மாநில மக்களையும், தமிழ்நாட்டு மக்களையும் நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் நீங்கள் பாசிச சக்திகளை இங்கு அனுமதிக்கவில்லை
நம்முடைய ஒற்றுமையே நமக்கு பலமாக இருக்கிறது. அந்த ஒற்றுமையை தொடர்வோம். தமிழ்நாட்டு மக்களும், கேரள மக்களும் சாதிய சக்திகளை முறியடிக்கின்ற சிறந்த மக்களாக இருக்கின்றனர். தெலங்கானா மக்களும் கேரளா, தமிழ்நாட்டை பின்பற்றி வாழ விரும்புகிறோம். தெலுங்கானாவில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என அனைவரும் வசிக்கிறோம். ஆனால் நாங்கள் ஒரு குடையின் கீழ் ஒரே குடும்பமாக வழ்கிறோம்.
தெலங்கானா அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள், பழங்குடியினர் என அனைவருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறோம். இந்திரா காந்தி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பிலான வீடுகளை கட்டிக் கொடுக்கிறோம். விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கி வருகிறோம். ஏழைகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருகிறோம்" என்றார்.