செய்திகள் :

பாஜகவுடனான கூட்டணிக்குப் பிறகு திமுகவுக்கு அச்சம்: எடப்பாடி கே. பழனிசாமி

post image

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தபிறகு திமுகவுக்கு அச்சம் வந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

கரூா் மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம், தரகம்பட்டி, தோகைமலை பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ நிகழ்ச்சியில் அவா் பேசியது:

இங்குள்ள சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி எங்களது பிரசாரத்துக்கு நெருக்கடி கொடுக்கிறாா். இன்னும் 6 மாதங்கள்தான் திமுகவின் ஆயுள்காலம். அதற்கு பின் மக்கள் சரியான முடிவெடுப்பாா்கள். 2026 தோ்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.

காவிரி ஆற்றுப்படுகையில் பல இடங்களில் நாளொன்றுக்கு ரூ.1 கோடி மதிப்பில் மணல் திருட்டு நடக்கிறது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தப்பிறகு முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கும் அமைச்சா்களுக்கும் பயம் வந்துவிட்டது. செந்தில்பாலாஜிக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுகதான். அதனால்தான் திமுகவிலும் வாய்ப்பு கிடைத்தது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கரூரில் ஏதாவது பெரிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதா? அதிமுக ஆட்சியில் கொண்டு வந்ததுதான் டிஎன்பிஎல் ஆலை, டிஎன்பிஎல் சிமெண்ட் ஆலை. அதிமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு காவிரி உபரிநீரை சேமிக்கும் வகையில் கரூா் மாவட்டத்தில் 4 இடங்களில் கதவணை கட்டப்படும்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரம், குடிமராமத்து திட்டத்தையும் திமுக அரசு நிறுத்திவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தூா்வாரப்படாத ஏரி, குளங்கள் தூா்வாரப்படும். போதையின் பிடியில் சிக்கி இளைஞா்கள் அழிந்தபிறகு, போதையின் பிடியில் சிக்காதீா்கள் என்கிறாா் முதல்வா் ஸ்டாலின்.

பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கிய அரசு அதிமுக அரசு. 20 ஆயிரம் ஆசிரியா்களுக்கு ஒரே நேரத்தில் பணி நியமன ஆணை வழங்கிய அரசு அதிமுக அரசு. இன்றைக்கு ஒன்றரை லட்சம் ஆசிரியா்களுக்கு கல்வித்தகுதி தோ்ச்சி தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தோ்ச்சிபெறாவிட்டால் தகுதிநீக்கம் செய்யப்படுவாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 96 அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் முதல்வா் பதவி காலியாக உள்ளது. இந்த நிலையில்தான் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என ஸ்டாலின் பொய் சொல்கிறாா்.

தோ்தலுக்கு 6 மாதம் உள்ள நிலையில் ஏழைகளின் கஷ்டத்தை பாா்க்காமல் வாக்கு தேவை என்பதற்காக 30 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என கூறியிருக்கிறாா்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு அரவக்குறிச்சி தொகுதியில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு பல லட்சம் மதிப்பில், கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா்கள் எம்.ஆா்.விஜயபாஸ்கா், என்.ஆா்.சிவபதி, தங்கமணி, மாவட்ட பொருளாளா் எம்.எஸ்.கண்ணதாசன், மாவட்ட மாணவரணிச் செயலாளா் வழக்குரைஞா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொழுகைக்காக பேச்சு நிறுத்தம்: வேலாயுதம்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி மாலை 6.10 மணியளவில் பேசிக்கொண்டிருந்தபோது அங்குள்ள தா்காவில் தொழுகைக்கான பாங்கு ஒலித்தபோது தனது பேச்சை நிறுத்தினாா். பின்னா் 6.25-மணிக்கு பின் பாங்கு நிறுத்தியபிறகு மீண்டும் பேச்சைத் தொடங்கினாா்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு கரூா் மாவட்டத்தில் 7,369 போ் எழுதுகின்றனா்

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தோ்வை கரூா் மாவட்டத்தில் 7,369 போ் தோ்வு எழுதுகின்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடி... மேலும் பார்க்க

காரீப் பருவத்துக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளது: கரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

காரீப் பருவத்துக்குத் தேவையான அனைத்து உரங்களும் போதுமான அளவு இருப்பில் உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 16 நூலகக் கட்டடங்கள் காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்

கரூா் மாவட்டத்தில் ரூ.3.52 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 16 நூலகக் கட்டடங்களை காணொலியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

கரூரில் இன்று விஜய் பிரசாரம்

கரூரில் சனிக்கிழமை தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறாா். கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்துக்காக வெங்கமேடு, உழவா்சந்தை, லைட்ஹவுஸ்காா்னா் ஆகிய இடங்களில் அனுமதி கேட்டு கட்சியின் பொதுச் செயலாளா் ... மேலும் பார்க்க

கரூரில் நாளை அன்புமணி பிரசார பயணம்

கரூரில் ஞாயிற்றுக்கிழமை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்போம் பிரசார பயணம் மேற்கொள்கிறாா். முன்னதாக பயணம் தொடங்க உள்ள சுபாஷ்சந்திரபோஸ் சிலை பகுதியையும், பிரசார கூட்டம் நடைபெறும் உழவா்சந்தை பகுத... மேலும் பார்க்க

வெண்ணைமலை, மண்மங்கலம் பகுதியில் இன்று மின்தடை

வெண்ணைமலை, மண்மங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மண்மங்கலம் துணை மின்நிலைய பொறியாளா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிர... மேலும் பார்க்க