செய்திகள் :

பாஜக கூட்டணியில் இணைவதற்கு பதில் ராஜிநாமா செய்துவிடுவேன்: ஒமர் அப்துல்லா!

post image

ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு, பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு பதில் பதவியை ராஜிநாமா செய்துவிடுவேன் என முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீருக்கு, மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என முதல்வர் ஒமர் அப்துல்லா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.

இந்த நிலையில், ஆனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஒமர் அப்துல்லா, மாநில அந்தஸ்துக்காக எந்தவொரு அரசியல் சமரசத்தையும் ஏற்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் பேசியதாவது:

“பாஜகவுடன் கூட்டணி அமைக்க நான் தயாராக இல்லை. அரசில் பாஜகவையும் சேர்க்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் எனது ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள். இங்குள்ள எம்எல்ஏ ஒருவரை முதல்வராகப் பதவி உயர்த்தி பாஜகவுடன் அரசு அமைத்துக்கொள்ளுங்கள்” என அவர் பேசியுள்ளார்.

இத்துடன், ஜம்மு - காஷ்மீரின் அரசில் பாஜக இணைந்தால், மத்திய அரசு விரைவாக மாநில அந்தஸ்து வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: தில்லி கல்வி மைய இயக்குநர் சைதன்யானந்த் சரஸ்வதி கைது! டார்ச்சர் அறை கண்டுபிடிப்பு

Chief Minister Omar Abdullah has said that he will resign as Chief Minister instead of forming an alliance with the BJP for statehood for Jammu and Kashmir.

பிகார் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் பெயரின் விவரங்களை, தேர்தல் ஆணைய இணைய ... மேலும் பார்க்க

இத்தாலி பிரதமர் மெலோனிக்காக முன்னுரை எழுதிய மோடி!

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதைப் புத்தகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதையான “ஐயம் ஜார்ஜியா: மை ரூட்ஸ், மை பிரின்ஸிபிள்ஸ்... மேலும் பார்க்க

தில்லி கல்வி மைய இயக்குநர் சைதன்யானந்த் சரஸ்வதி கைது! டார்ச்சர் அறை கண்டுபிடிப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தில்லியில், தனியார் கல்வி மையத்தின் இயக்குநர் சைதந்யானந்த் சரஸ்வதி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், கல்வி மைய வளாகத்தில் இருந்த டார்ச்சர் அறை கண்டுபிடி... மேலும் பார்க்க

லடாக்கில் 7 மணி நேரம் ஊரடங்கு தளர்வு!

வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 7 மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு! மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவியை வழங்கவில்லை! - கேரள முதல்வர்

வயநாடு நிலச்சரிவுக்கு, மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவி இதுவரை வழங்கப்படவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரளத்தின், வயநாடு மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டின் ஜூலை 30 ஆ... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து தலைநகர் தில்லிக்கு இன்று காலை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இன்று காலை மும்பைய... மேலும் பார்க்க