செய்திகள் :

பாஜக மாநில செயலாளருக்கு எதிரான புகார்: சேலம் நீதிமன்றத்துக்கு உத்தரவு

post image

சென்னை: பாஜக மாநில செயலாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வன்கொடுமை புகார் தொடர்பாக, சேலம் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் பாஜக ஸ்டார்ட்அப் விங் மாநில செயலாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது பெற்றோர் சரணடைந்து ஜாமீன் கோரினால், புகார்தாரரின் ஆட்சேபத்தை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என சேலம் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம், ஏற்காட்டில் நில தகராறு தொடர்பாக, பக்கத்து எஸ்டேட் காவலாளி வெள்ளையன் என்பவரை, பாஜக மாநில செயலாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் 3 பேர் சேர்ந்து, கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சிபி சக்கரவர்த்தி, தன்னை ஜாதிப்பெயரை கூறி திட்டி, தாக்கியதாக வெள்ளையன் அளித்த புகாரின் அடிப்படையில், ஏற்காடு போலீஸார், சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது தந்தை மணவாளன், மனைவி சித்ரா ஆகியோருக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக, சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தால் ஜாமீன் வழங்கக் கோரி, சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது பெற்றோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், தங்களுக்கு எதிராக, பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன் ஜாமீன் பெறுவதை தடுக்கும் நோக்கத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சரணடைந்து ஜாமீன் கோரும் போது, புகார்தாரரின் ஆட்சேபங்களை கேட்ட பின் ஜாமீன் மனு மீது முடிவெடுக்க வேண்டும் என சேலம் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

2026 பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி: ராமதாஸ்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், யார் எதைச் சொன்னாலும் காது கொடுத்து கேளாதீர்கள் என்றும், நான் சொல்வதுதான் நடக்கும் எனவும் அன்... மேலும் பார்க்க

பாமக மகளிர் மாநாடு: பூரண மதுவிலக்கு உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் பெருவிழா மாநாடு இன்று (ஆக. 10) நடைபெற்றது.பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ... மேலும் பார்க்க

கோவையில் முதல்வர் ஸ்டாலின் சாலைவலம்!

கோவை விமான நிலையம் முதல் அவிநாசி வரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை செல்கிறார்.கோவை மற்றும் திருப்பூர், உடுமலைப்பேட்டையில் நாளை காலை அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கவிருக்கிறார். மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, அரும்பாக்கம், அமைந்தகரை, புரசைவாக்கம், அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 25 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்... மேலும் பார்க்க

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்- சென்னை காவல் ஆணையர் அலுவலத்கதில் புகார்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலத்கதில் புகார் அளிக்கப்பட்டது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பலர... மேலும் பார்க்க