செய்திகள் :

பாடகர் உதித் நாராயண் குடியிருப்பில் தீ விபத்து!

post image

பாடகர் உதித் நாராயணின் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை அந்தேரி தெற்கு பகுதியில் திரைப்படப் பாடகர் உதித் நாராயணன் வசிக்கும் ஸ்கைபேன் குடியிருப்பில் நேற்று இரவு 9.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் பலியானதாகவும் சிலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

குடியிருப்பு வாசிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு 8 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்க வீரர்கள் போராடியுள்ளனர்.

இந்த விபத்தில் பலியானவர் உதித் நாராயணின் அண்டை வீட்டுக்காரரான ராகுல் மிஸ்ரா (75) என்று தெரிய வந்துள்ளது. 11-வது மாடியில் உதித் நாராயணுக்கு அடுத்த வீட்டில் வசிக்கும் இவர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவருடன் இருந்த உறவினரான ரௌனக் மிஸ்ரா படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்துக்கான காரணமாக மின் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும், மிஸ்ராவின் குடும்பம் ஏற்றிய விளக்கின் தீ வீட்டின் திரைகளில் பற்றியதாகவும், மிஸ்ராவின் மனைவி பாதுகாவலர்களிடம் ஓடிச் சென்று உதவி கேட்டு வருவதற்குள் தீ வீடு முழுக்கப் பரவியதாகவும் குடியிருப்பு வாசிகள் கூறுகின்றனர்.

இதையும் படிக்க | கட்டுப்பாட்டை இழந்த அஜித்: நொறுங்கிய கார் - விடியோ!

இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், விபத்து ஏற்பட்டதும் அந்தக் குடியிருப்புக்குச் செல்லும் சாலைகள் அனைத்து அடைக்கப்பட்டு மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டது.

சம்பவம் நடைபெற்றபோது பாடகர் உதித் நாராயண் வீட்டில் இல்லை என்று குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.

எதிர்நீச்சல் -2 வரவேற்பு குறைவு: இந்த வார டிஆர்பி பட்டியல்!

எதிர்நீச்சல் 2 தொடருக்கு கடந்த வாரம் இருந்ததை விட இந்த வாரத்துக்கு டிஆர்பி புள்ளிகள் குறைந்துள்ளது.சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ஏராளமான ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். ஒவ்வொரு வாரமும் எந்... மேலும் பார்க்க

நேசிப்பாயா மேக்கிங் விடியோ!

நேசிப்பாயா படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை விஷ்ணு வரதன் இயக்கி வருகிறார். ‘நேசிப்பாயா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்ப... மேலும் பார்க்க

ஹிந்தி பிக் பாஸ்: 94 நாள்களில் வெளியேறிய ஸ்ருதிகா!

குறைவான வாக்குகளைப் பெற்றதாக ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தமிழ் நடிகை ஸ்ருதிகா வெளியேற்றப்பட்டார். அவர் மொத்தம் 94 நாள்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார். ஹிந்தியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பா... மேலும் பார்க்க

‘பிரேக்கிங் பேட்’ புகழ் வால்டர் ஒயிட் வீட்டின் மதிப்பு ரூ.35 கோடி!

‘பிரேக்கிங் பேட்’ புகழ் வால்டர் ஒயிட்டின் வீட்டின் மதிப்பு 4 மில்லியன் டாலராக (ரூ.35 கோடி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நெட்பிளிக்ஸில் வெளியாகி உலக முழுவதும் கோடிக்கணக்கான அளவில் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ளத... மேலும் பார்க்க

பிக் பாஸ் டாப் 5 போட்டியாளர்கள்! விசித்ரா வெளியிட்ட பட்டியல்

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இறுதி 5 போட்டியாளர்களின் பட்டியலை நடிகை விசித்ரா வெளியிட்டுள்ளார். கடந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விசித்ரா, இம்முறை ட... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: தர்ஷிகா, அன்ஷிதாவிடம் மன்னிப்பு கோரிய வி.ஜே. விஷால்!

பிக் பாச் சீசன் 8 நிகழ்ச்சியில் நடிகர் வி.ஜே. விஷால் இரு பெண்களிடம் மன்னிப்புக் கோரினார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அன்ஷிதா, தர்ஷிகா ஆகியோரிடம் மன்னிப்பு விஷால் கேட்ட விடியோ பலரால் பகிரப்பட... மேலும் பார்க்க