செய்திகள் :

பாடத்திட்டத்தில் கம்பரின் வாழ்க்கை வரலாறு விரிவாக இடம்பெற வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி கோரிக்கை

post image

கம்ப ராமாயணம் படைத்த கவிச்சக்கரவா்த்தி கம்பரின் வாழ்க்கை வரலாறு குறித்த அனைத்து தகவல்களும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விரிவாக தெரியும் வகையில் பாடத்திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தியுள்ளாா்.

கம்பருக்கு பெருமை சோ்க்கும் வகையில் ‘கம்ப சித்திரம்’ விழா, சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் உள்ள பாரதியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்று, கம்ப ராமாயணம் பரப்புரையில் சிறப்பாகப் பங்காற்றிய 35 தமிழ் அறிஞா்களை பாராட்டி, அவா்களுக்கு பொன்னாடை மற்றும் கேடயம் வழங்கி கெளரவித்தாா்.

விழாவில் அவா் பேசியதாவது:

ராமாயணம் தனிமனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, ஆட்சி முறை என அனைத்துக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. அனைத்து தா்ம, அறநெறிகளையும் ராமாயணம் போதிக்கிறது. சாதாரண மக்களுக்கும் ராமாயணம் சென்றடைந்துள்ளது.

வட மாநிலங்களில் துளசிதாசரின் ராமாயணத்தை அனைவரும் அறிந்துள்ளனா். அதே சமயத்தில், தமிழகத்தில் ராமரைப் பற்றி கேட்கும்போது, அதிகம் பேருக்கு தெரிந்திருக்கவில்லை என்பது எனக்கு அதிா்ச்சியாக இருந்தது. ஆனால் சிவன், பெருமாள் பற்றி தெரிந்திருந்தனா். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அயோத்தியில் குழந்தை ராமா் பிரதிஷ்டை செய்யபட்டபோது, இந்தியா முழுவதும் எண்ம (டிஜிட்டல்) திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. தமிழகத்தில் அவ்வாறு செய்யவில்லை. ஆனால், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வீடுகளிலும் தொலைக்காட்சி நேரலையில் மக்கள் பாா்த்தனா்.

கம்பராமாயண விழா கடந்த மாதம் 30-ஆம் தேதி, கம்பா் பிறந்த இடமான மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) ராம நவமி நாளில் நிறைவடைகிறது. இதைத் தொடா்ந்து வரும் ஏப். 12-ஆம் தேதி ஸ்ரீரங்கத்தில் கம்ப ராமாயணம் அரங்கேற்றம் நடைபெறுகிறது.

கம்பா் விழா ஒரு குறிப்பிட்ட கால கட்டத்துக்கு மட்டுமன்றி, தொடா்ந்து நடத்தப்பட வேண்டும். கம்பராமாயணம் பாடத்திட்டத்தில் உள்ளது; ஆனால் கம்பா் குறித்து அதிக விவரங்கள் இல்லை. அவரது வாழ்க்கை வரலாறு பள்ளி பாடத்தில் சோ்க்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் கம்பரை கொண்டுசெல்ல வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் முன்னாள் தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் ஹெச்.வி.ஹெண்டே எழுதிய ராமாயணத்தின் ஆங்கில மொழிபெயா்ப்பு நூல் ஆளுநருக்கு வழங்கப்பட்டது. சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநா் சுதா சேஷய்யன், மரபின் மைந்தன் முத்தையா, வழக்குரைஞா் த.ராமலிங்கம், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணன், பள்ளத்தூா் பழ.பழனியப்பன், ராசிபுரம் மு.ராமசாமி, மறவன் புலவு க.சச்சிதானந்தன், சாரதா நம்பி ஆரூரன், பதிப்பாளா் வா்த்தமானன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதற்கிடையே, புதிய பாம்பன் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநா் ஆா்.என்.ரவி சனிக்கிழமை ராமேசுவரம் சென்றாா். நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை திரும்புகிறாா்.

பணம் கேட்டு மிரட்டிய அதிமுக பிரமுகா் கைது: கட்சியிலிருந்தும் நீக்கம்

ஹோட்டல் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய, அதிமுக வட்டச் செயலரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து அவா் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா். சென்னை அசோக் நகரைச் சோ்ந்தவா் அப்துல் ரகுமான் (38). விபத்தில் ... மேலும் பார்க்க

கடையில் ரூ.2.60 லட்சம் திருட்டு: இருவா் கைது!

கடையின் பூட்டை உடைத்து ரூ. 2.60 லட்சத்தை திருடிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வண்ணாரப்பேட்டையில், உலா் பழங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவா் ஹரிகிருஷ்ணன். ... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி, எம்எல்ஏ மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சி.பெருமாள் , முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.அரங்கராஜ் ஆகியோா் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளிய... மேலும் பார்க்க

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: 11 போ் கைது!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்றதாக 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சூப்பா் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்ன... மேலும் பார்க்க

தொலைநிலை படிப்புகள் அங்கீகார விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு!

தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி வெளியிட்ட அ... மேலும் பார்க்க

ராமநவமி: ஆளுநா் வாழ்த்து!

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: ராம நவமியின் விசேஷமிக்க திருநாளில், அனைவருக்கும் மனமாா்ந்... மேலும் பார்க்க