செய்திகள் :

பாட்டா இந்தியா லாபம் 1.2% உயர்வு!

post image

புதுதில்லி: முன்னணி ஷூ தயாரிப்பு நிறுவனமான, பாட்டா இந்தியா லிமிடெட், டிசம்பர் 2024 உடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 1.2 சதவிகிதம் அதிகரித்து ரூ.58.7 கோடி ஆக உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ரூ.57.97 கோடியாக நிகர லாபம் இருந்தது என பாட்டா இந்தியா தனது ஒழுங்குமுறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் அதன் வருவாய் 1.69 சதவிகிதம் உயா்ந்து ரூ.918.79 கோடியானது.

நிறுவனத்தின் வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடனளிப்பு வரம்பு 141 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து, வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.58 கோடியாக உள்ளது என்று பாட்டா இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டிசம்பர் காலாண்டில் அதன் மொத்த செலவினம் ரூ.840.57 கோடியாக இருந்தது. இதர வருமானத்தையும் சேர்த்து அதன் மொத்த வருமானம் 1.54 சதவிகிதம் உயர்ந்து ரூ.928.65 கோடியாக உள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி குஞ்சன் ஷா தெரிவிக்கையில், சந்தை சற்று மௌனமாக இருந்தபோதிலும், பாட்டா அதிக எண்ணிக்கையில் வால்யூம்களை செய்ததுள்ளது என்றார்.

பாட்டா இந்தியா லிமிடெட் பங்குகள் இன்று மும்பை பங்குச் சந்தையில் 0.39 சதவிகிதம் வரை உயர்ந்து ரூ.1,339.55 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: 26% உயர்ந்த ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் லாபம்!

1000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ், நிஃப்டி 1.4% வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிஃப்டி 23,100 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது. வணிக நேரத் தொடக்கத்தில் சரிவுடன் தொடங்கிய வணிகம் பிற்பாதியில் கடும் சரிவை எட்... மேலும் பார்க்க

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 4% உயர்வு!

2024-ல் இந்திய ஸ்மார்ட்போன்களுக்கான சந்தை 4 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 15 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா... மேலும் பார்க்க

சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை! சிறு-குறு நிறுவனங்கள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (பிப். 11) சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 47 புள்ளிகள் சரிவுடனும் நிஃப்டி 30 புள்ளிகள் சரிவுடனும் வணிகம் ஆரம்பமானது. கடந்த நான்கு நாள்களாகத் தொடர்ந்து பங்குச் சந்தை ... மேலும் பார்க்க

சேவைகள் துறையில் 2 ஆண்டுகள் காணாத மந்தம்

புது தில்லி: இந்திய சேவைகள் துறை கடந்த ஜனவரி மாதம் முந்தைய இரண்டு ஆண்டுகள் காணாத குறைவான வளா்ச்சியைக் கண்டுள்ளது.இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் த... மேலும் பார்க்க

26% உயர்ந்த ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் நிறுவனத்தின் லாபம்!

புதுதில்லி: ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபமாக, அதாவது டிசம்பர் காலாண்டு 26 சதவிகிதம் வரை அதிகரித்து ரூ.111.68 கோடியாக உள்ளது.இது முந்தைய 2023-24 ஆண்டு, அக... மேலும் பார்க்க

ஐசிஆர்ஏ நிகர லாபம் 30 சதவிகிதம் அதிகரிப்பு!

புதுதில்லி: நடப்பு நிதியாண்டின், டிசம்பர் காலாண்டில், வரிக்கு பிந்தைய லாபமாக ஐசிஆர்ஏ (ICRA) நிறுவனத்தின் லாபம் 30 சதவிகிதம் அதிகரித்து ரூ.42.22 கோடி ஆக உள்ளது.ஒருங்கிணைந்த அடிப்படையில், உள்நாட்டு மதிப... மேலும் பார்க்க