ரஹானேவின் கோரிக்கையை நிராகரித்த ஈடன் கார்டன் பிட்ச் மேற்பார்வையாளர்!
பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட நக்சல்களின் உடல்கள் மீட்பு!
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் என்கவுன்டரில் பலியான 3 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 3 நக்சல்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் ரூ. 25 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சலான சுதிர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மற்ற மூவரை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அப்பகுதியிலிருந்து இன்சாஸ் ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை பிஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதில் பலியாகும் நக்சல்களின் உடல்கள் மீட்கப்படுவது அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலை மேற்கொண்ட பாதுகாப்புப் படையினரை சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு டியோ சாய் பாராட்டியுள்ளார். மேலும், துணை முதல்வர் விஜய் ஷர்மா, நக்சல்களின் அச்சுறுத்தலில் இருந்து தங்களை மீட்போம் என அரசு உறுதியளித்துள்ளதாகவும் இதற்காக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக, சத்தீஸ்கரில் கடந்த 2023 ஆம் ஆண்டில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து கடந்த ஓராண்டில் 2,619 நக்சல்கள் கைது செய்யப்பட்டு, சரணடைந்தும் கொல்லப்பட்டுமுள்ளதாக மார்ச் 21 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.
மேலும், கடந்த வாரம் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட இரு வேறு தாக்குதல்களில் கொல்லப்பட்ட 30 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டதுடன் மிகப் பெரியளவிலான ஆயுதக் குவியல்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:இந்தியா - வங்கதேச எல்லையில் கடத்தப்படும் கால்நடைகள்!