செய்திகள் :

'சிங்கார சென்னை' புதிய பயண அட்டை அறிமுகம்!

post image

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் இணைந்து வழங்கும் 'சிங்கார சென்னை' பயண அட்டையை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்.  

சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் சென்றுவருவதற்கு ஏதுவாக 'சிங்கார சென்னை' பயண அட்டை பயன்பாட்டில் உள்ளது. எஸ்பிஐ வங்கியின் 'சிங்கார சென்னை' பயண அட்டை பயன்பாட்டில் உள்ள நிலையில் தற்போது ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் உதவியுடன் ஒரு பயண அட்டை இன்று(மார்ச் 26) அறிமுகமாகியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வரின் உத்தரவின்படி, மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் இணைந்து வழங்கும் 'சிங்கார சென்னை' பயண அட்டை வாயிலாக பயணிகள் பயணச்சீட்டு பெற்று பயணம் மேற்கொள்ள ஏதுவாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், இன்று (26.03.2025) தலைமைச் செயலகத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

சிங்கார சென்னை பயண அட்டையானது, பயணிகளுக்கு தடையற்ற மற்றும் பணமில்லா பரிவர்த்தனை பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தொலைநோக்குத் திட்டமாகும். மாநகர் போக்குவரத்துக் கழக அனைத்துப் பேருந்துகளிலும், ஏற்கனவே சிங்கார சென்னை பயண அட்டையை பயன்படுத்தும் வகையில், மின்னனு பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் (Electronic Ticketing Machine) உபயோகத்தில் உள்ளது. இத்திட்டத்தில், ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கி வாயிலாக “சிங்கார சென்னை” பயண அட்டைகள் வழங்கப்படுகிறது.  இதில், 30,000-க்கும் மேலான பயண அட்டைகள் பயணிகளுக்கு வழங்கப்பட்டு, ஒவ்வொரு நாளும்
16,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இத்திட்டத்தினை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி சென்னை மாநகரின் முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் பயணிகள் பயன்பாடு அதிகம் உள்ள பேருந்து நிறுத்தங்களிலும் இந்த “சிங்கார சென்னை” பயண அட்டை ரூ.100/-க்கு வழங்கப்படும்.  இதில் ரூ.50/- மதிப்புக்கான பயணம் மேற்கொள்ளலாம். மேற்கொண்டு பயணம் மேற்கொள்ள இவ்வட்டைகளை இணையவழி சேவை, கைப்பேசி செயலி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் விற்பனை மையங்கள் மூலமாக எளிதாக ரீசார்ஜ் செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சிங்கார சென்னை பயண அட்டையில் ஏற்கனவே 20 பயண நடைகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் (UPDATE) முறை மாற்றப்பட்டு, பயணிகள் எண்ணிக்கையற்ற பயண நடைகளை மேற்கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, இவ்வட்டையின் பின்புறம் உள்ள க்யூ.ஆர்.குறியீடை (QR Code) பயணிகள் தங்களின் கைப்பேசி செயலிகள் மூலம் ஸ்கேன் (Scan) செய்து ரீசார்ஜ் (Recharge) செய்துகொள்ளலாம். மேலும், ரீசார்ஜ் (Recharge) செய்த பின் அவ்வட்டையை புதுப்பிக்க (Balance Update) பயணிகள் என்.எப்.சி. (NFC) தொழில்நுட்பம் கொண்ட கைபேசிகள் மூலம் தாமாகவே ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் புதுப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

இதையும் படிக்க | 'திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்' - சேகர்பாபு

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க

துருக்கி மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ! விடியோ வைரல்!

துருக்கியில் நாடு தழுவிய மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ வேடமணிந்த ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ... மேலும் பார்க்க