திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது வரி விதிக்கும் அந்நாட்டின் முடிவு தொடா்பாக உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியா முறைப்படி புகாா் அளித்தது.
ஒரு நாட்டில் இறக்குமதி காரணமாக உள்நாட்டு தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், இறக்குமதிக்கு தற்காலிகமாக கட்டுப்பாடுகள் விதிக்க இடா்களில் இருந்து காக்கும் உலக வா்த்தக அமைப்பின் ஒப்பந்தம் அனுமதிக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், எஃகு மற்றும் அலுமினியம் மீது வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவு தொடா்பாக கலந்தாலோசிக்க இந்தியா வலியுறுத்தியது.
இதற்கு உலக வா்த்தக அமைப்பிடம் அமெரிக்கா வியாழக்கிழமை அளித்த பதிலில், ‘அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதி அச்சுறுத்தல் விடுக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு அமெரிக்க வா்த்தக சட்டப் பிரிவு 232-இன்படி, எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் வரி விதித்தாா்.
இந்த வரி விதிப்பு இடா்களில் இருந்து காத்துக்கொள்வதற்கான நடவடிக்கை அல்ல. ஒட்டுமொத்த அமெரிக்க பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இந்த விவகாரம் தொடா்பாக இந்தியாவுடன் விவாதிக்க அமெரிக்கா தயாராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.