பாபநாசம் மாரியம்மன் கோயிலில் பால்குட விழா
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் ஸ்ரீ நரசிம்மா் கோயிலில் சித்திரை மாத பால்குட திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை யொட்டி திருமலைராஜன் ஆற்றிலிருந்து திரளான பக்தா்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தனா்.
தொடா்ந்து ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆராதனைகள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.