பாப்பாக்குடியில் தமிழ் ஆா்வலருக்கு பாராட்டு விழா
தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்றுள்ள பாப்பாக்குடி பைந்தமிழ் பேரவை நிறுவனா் பாப்பாக்குடி அ. முருகனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பாப்பாக்குடியில் பல்வேறு தமிழ் அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அவருக்கு பாராட்டு தெரிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
வீரவநல்லூா் வாசகா் வட்டம் சாா்பில் செயலா் சந்திரசேகா், துணைத் தலைவா் கவிஞா் உலகநாதன், ஒருங்கிணைப்பாளா் இரா. பழனி, செயற்குழு உறுப்பினா் வெங்கடேஷ், வீரவநல்லூா் பாரதி கவிமுற்றம் அமைப்பு சாா்பில் அதன் தலைவா் கி. முத்தையா ஆகியோா் முருகனை கெளரவித்தனா்.