செய்திகள் :

பாமக பொதுக்குழு முதல் விசிக ஆர்ப்பாட்டம் வரை - 09.08.2025 முக்கியச் செய்திகள்!

post image

Pஆகஸ்ட் 9 முக்கியச் செய்திகள்

  • தேனி பங்களாமேடு பகுதியில் 14 வயது சிறுவன் பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் என்ஜின் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  • சல்மான் கானை தொடர்பு கொண்டதற்காக கனடாவில் காமடியன் கபில் சர்மாவின் ரெஸ்டாரண்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது லாரன்ஸ் பிஷ்னோய் குழு. "சல்மான் கானுடன் பணிபுரிபவர்கள் அதிலிருந்து விலகவில்லை என்றால் கொலை செய்வோம்" என ஹர்ரி பாஸ்கர் என்ற ரௌடி மிரட்டியிருக்கிறார்.

எஸ்.குமாரசாமி - தூய்மைப் பணியாளர் போராட்டம்
எஸ்.குமாரசாமி - தூய்மைப் பணியாளர் போராட்டம்
  • சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 9 வது நாளாக போராடி வருகின்றனர். அமைச்சர் சேகர் பாபு தலைமையில் அரசு - போராடுபவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது. நாளை காலை 10 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

  • திருநெல்வேலியில் மென்பொருள் பொறியாளர் கவின் படுகொலையைத் தொடர்ந்து ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டுமென்ற விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. "ஒன்றிய அரசு இந்தச் சட்டத்தை இயற்றட்டும்' என்று இருக்காமல், தமிழ்நாடு அரசு இந்தச் சட்டத்தை இயற்றி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான அரசாக இருக்கட்டும்." எனப் பேசியுள்ளார்.

  • அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து உக்ரைன் போர் குறித்து விவாதிக்க இருக்கும் சூழலில், "உக்ரைன் பங்குபெறாத எந்த சந்திப்பும் ஆபத்தான தீர்வையே தரும்" என எச்சரித்துள்ளார் அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
  • இந்திய விமானப் படைத் (IAF) தலைவர் ஏ.பி சிங், ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை அமைப்புகள் பாகிஸ்தானின் 5 போர் விமானங்களையும் ஒரு கண்காணிப்பு விமானத்தையும் வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளார்.

  • செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "எம்ஜிஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை. எம்ஜிஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வமானவர். அப்படிப்பட்டவரை விமர்சனம் செய்தால் அரசியலில் காணாமல் போய்விடுவார்கள்... அதிமுக சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி" எனப் பேசியிருக்கிறார்.

  • "வெறும் கருணாநிதி வெறுப்பு மற்றும் சினிமா புகழை வைத்து ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். எந்த கோட்பாட்டு பின்னணியும் இல்லாதவர்." என விமர்சித்துள்ளார் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு.

  • இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்களை மீட்கக் கோரி தங்கச்சி மடம் அரசு மருத்துவமனை முன்பு மீனவர்களின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

  • பாமக தலைவர் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. "பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி தேர்தலை நடத்த ஓராண்டு அவகாசம் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோர் 2026 ஆகஸ்ட் வரை பதவியில் நீடிப்பார்கள்." என்பது உட்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • பாமகவில் நடைபெறும் பிரச்னைகள் ஒரு சிலரின் தூண்டுதலால் நடப்பதாகப் பேசியுள்ளார் திலகபாமா.

`ஸ்டாலின் நடத்தியது மேஜிக் ஷோ, எடப்பாடியார் நடத்தியது ரியல் ஷோ' - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

"ஸ்டாலின் நடத்திய ரோடு ஷோ மேஜிக் ஷோ, ஆனால், எடப்பாடியார் நடத்திய ரோடு ஷோ ரியல் ஷோ" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஆர்.பி.உதயகுமார்மதுரை கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த... மேலும் பார்க்க

CM ஸ்டாலினையே திட்டுவீங்களா? - டென்ஷனான சேகர் பாபு; பின்வாங்காத தூய்மைப் பணியாளர்கள்! - Spot Report

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் மண்டலங்களை தனியார்மயப்படுத்தக் கூடாது என்பதும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுமே இவர்களின் கோரிக்கை. இ... மேலும் பார்க்க

Vijay-க்கு EPS தூது? பிரேக் போடும் Seeman! | Elangovan Explains

'மதுரை மாநாட்டில் மாஸ் காட்ட வேண்டும்' என திட்டமிட்டு செயல்படுகிறார் விஜய். இதற்கு பின்னணியில் மெகா கூட்டணி கணக்கு உள்ளது. முக்கியமாக 'எடப்பாடி மற்றும் பன்னீர்' இருவரின் மகன்களும் தனித்தனியே விஜய்-இடம... மேலும் பார்க்க

அரசுத்திட்ட விழா; அழைப்பு விடுக்காத இந்தியன் வங்கித் தலைவர் மீது உரிமை மீறல் தீர்மானம்

மதுரையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் வழங்கும் விழாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை அழைக்காத இந்தியன் வங்கித் தலைவர் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மான... மேலும் பார்க்க

'கெட்டப் பேராகுது; கலைஞ்சு போங்க!’ - கண்டிஷன் போடும் அமைச்சர் சேகர் பாபு? முறிந்த பேச்சுவார்த்தை

அப்செட்டாக மண்டலங்கள் 5 மற்றும் 6 யை தனியார்மயப்படுத்துவதை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 10 வது நாளை எட்டியிருக்கிற... மேலும் பார்க்க

"எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை!" - தொல்.திருமாவளவன் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"தம... மேலும் பார்க்க