கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!
பாலக்கோடு குந்தியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் குந்தியம்மன், ஆறுபடை சக்தி வேல்முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வழிபாட்டில் பல்வேறு திரவியங்கள், பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் குந்தியம்மன்,ஆறுபடை சக்தி வேல்முருகன் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இந்த விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.