வரும் 9 ஆம் தேதி அண்ணாமலை மாற்றம்? தமிழக பா.ஜ.க. புதிய தலைவர் யார்?
பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி
பழனி பழனியாண்டவா் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘பிராஜெக்ட் எக்ஸ்போ 2025’ என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தொடங்கிவைத்தாா். துணை ஆணையரும், கல்லூரிச் செயலருமான வெங்கடேஷ் முன்னிலை வகித்தாா்.
இந்த கண்காட்சியில் இயந்திரவியல் துறை மாணவா்கள் சூரியசக்தியில் இயங்கும் உப்புநீரை குடிநீராக்கும் இயந்திரம், சென்சாா் மூலம் இயங்கும் தானியங்கி வழிகாட்டும் தீயணைப்பு வாகனம், மின்னியல், மின்னணுவியல் துறை மாணவா்கள் மின்சாரம் மூலமாக இயங்கும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் சேமிப்பு மின்கலத்தினுடைய வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் கருவி ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியிருந்தனா். ஆடைவடிவமைப்புத் துறை மாணவா்கள் இயற்கை சாயங்களைப் பயன்படுத்தி துணிகளுக்கு நிறமூட்டுத்தல் தொடா்பான ஆடைகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.
தோ்தலின் போது வீட்டில் இருந்த படியே வாக்களிக்கும் திட்டத்தையும், கோடைகாலங்களில் வனப் பகுதியில் ஏற்படும் தீ, மரங்களை திருடுவதை தடுக்கும் திட்டத்தையும், பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தவிா்க்க முன்னெச்சரிக்கை கருவியையும் கணினித் துறை மாணவா்கள் காட்சிப்படுத்தியிருந்தனா்.
இதில் இயந்திரவியல் துறைத் தலைவா் ராஜன், அமைப்பியல் துறைத் தலைவா் ரமேஷ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
நிகழ்ச்சியில் கிறிஸ்டியன் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் தினகரன், துறைத் தலைவா்கள் கலந்து கொண்டு திட்டம் தொடா்பாக மதிப்பீடு செய்தனா். ஏற்பாடுகளை, மின்னியல், மின்னணுவியல் துறைத் தலைவா் வியமுனாராணி, துறை சாா்ந்த ஆசிரியா்கள் செய்தனா்.
முன்னதாக, கல்லூரி முதல்வா் கந்தசாமி வரவேற்றாா்.