செய்திகள் :

பாலியல் புகார் எதிரொலி: பெண் காவலர்களை பணியமர்த்துவதில் புதிய கட்டுப்பாடு?

post image

பெண் காவலர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பெண் காவலர்களை பணியில் அமர்த்துவது தொடர்பாக புதியக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

காவல் அதிகாரிகளின் அலுவலகம், முகாம் அலுவலகங்களில் பெண் காவல்துறையினரை பணியில் அமர்த்தக் கூடாது என்று எஸ்பி முதல் ஐஜி வரையிலான காவல் அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பாலியல் புகாரின் பின்னணி?

சென்னை பெருநகர காவல் துறையில் போக்குவரத்துப் பிரிவு வடக்கு மண்டல இணை ஆணையராகப் பணிபுரிந்து வந்தவா் மகேஷ் குமாா். இந்த நிலையில், மகேஷ்குமாா் மீது போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் இரு பெண் காவலா்கள், தனித்தனியாக டிஜிபி அலுவலகத்தில் அண்மையில் புகாா்கள் அளித்தனா்.

ஒரு பெண் காவலா் அளித்த புகாரில், ‘இணை ஆணையா் மகேஷ்குமாா் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வருகிறாா். மேலும், இரட்டை அா்த்தத்தில் பேசுகிறாா். வாட்ஸ்ஆப் காலில் அழைத்து அடிக்கடி அத்துமீறும் வகையில் பேசுகிறாா். தனிமையில் இருக்க அழைக்கிறாா்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

மற்றொரு பெண் காவலா் அளித்த புகாரில், ‘மகேஷ்குமாா் இரவு ரோந்து பணி, கண்காணிப்பு பணி என்ற பெயரில் கடுமையான நெருக்கடி கொடுத்து வருகிறாா். அவரது பாலியல் விருப்பத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதற்காக என்னை குறி வைத்து செயல்படுகிறாா். விருப்பத்துக்கு இணங்க மறுத்தால், தண்டனையாக பணியிடை நீக்கம் செய்வேன் என மிரட்டுகிறாா். மேலும், அவரது அலுவலகத்திலேயே என்னை பணியமா்த்தி பாலியல் தொல்லை கொடுத்து வருகிறாா் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இரு பெண் காவலர்களின் புகார்கள் குறித்து உயரதிகாரிகள் விசாரணை செய்தனா். சம்பந்தப்பட்ட பெண் காவலா்களை ரகசிய இடத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதோடு மகேஷ்குமாரின் கைப்பேசி ஆடியோ, வாட்ஸ்ஆப் தகவல் உள்பட பல்வேறு டிஜிட்டல் தகவல்களை ஆதாரமாக அதிகாரிகள் சேகரித்தனா்.

விசாரணையில் கிடைத்த தகவல்களை அறிக்கையாக சங்கா் ஜிவாலிடம் அதிகாரிகள் அளித்தனா். அந்த அறிக்கையில் பெண் காவலா்கள் கூறும் புகாரில் உண்மை இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சங்கா் ஜிவால், இணை ஆணையா் மகேஷ்குமாா் மீது நடவடிக்கை எடுக்க தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாருக்கு பரிந்துரைத்தாா். டிஜிபி பரிந்துரையின் அடிப்படையில் தீரஜ்குமாா், இணை ஆணையா் மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த விவகாரத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக பெண் காவலா்கள் குறித்து விரிவாக விசாரணை செய்து அறிக்கை தரும்படி தமிழக காவல் துறையின் பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி சீமா அகா்வால் தலைமையில் உள்ள விசாகா கமிட்டிக்கு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

விசாகா கமிட்டியினா், பெண் காவலா்கள் அளித்த புகாா் மனுக்கள் அடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளனா்.

சென்னையில் பிப்.17, 18-ல் பிரம்மஸ்தான மஹோத்சவம்: மாதா அமிர்தானந்தமயி வருகிறார்!

சென்னையில் பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் பிரம்மஸ்தான மஹோத்சவம் நடைபெறுவதையொட்டி, மாதா அமிர்தானந்தமயி தமிழகத்திற்கு வருகைதரவுள்ளார். மாதா அமிர்தானந்தமயி மடத்தின் 35-வது பிரம்மஸ்தான ஆண்டு விழா சென்னையி... மேலும் பார்க்க

முதல்வருக்குதான் டப்பிங் தேவை; எங்களுக்கு இல்லை: அண்ணாமலை

முதல்வருக்குத்தான் டப்பிங் தேவை, எங்களுக்கு தேவையில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமாலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "அமெரிக்காவை பொருத்தவரை டிரம்ப் ஒரு விஷயத்தை சொல்லி மக்களின் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் (பிப். 15, 16) வெயில் அதிகரிக்கும்!

தமிழகத்தில் இன்றும் நாளையும்(பிப். 15, 16) இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்... மேலும் பார்க்க

சாதிய வன்கொடுமைகள்: முதல்வருக்கு இயக்குநர் பா. ரஞ்சித் கேள்வி!

தமிழகத்தில் இன்றளவிலும் சாதிய வன்கொடுமைகள் நீடிப்பதாக இயக்குநர் பா. ரஞ்சித் பதிவிட்டுள்ளார்.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் `உங்களில் ஒருவன்’ என்ற நேர்காணல் விடியோ வெள... மேலும் பார்க்க

மயிலாடுதுறை படுகொலை சம்பவத்துக்கு முன்பகைதான் காரணம்: காவல்துறை விளக்கம்!

மயிலாடுதுறையில் சாராயம் விற்பனை செய்தவர்களை தட்டிக் கேட்டவரை தாக்கிய சம்பவத்தில் முன்விரோதம்தான் காரணம் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் ஒரே தெருவில் வசித்து... மேலும் பார்க்க

சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் படுகொலை

மயிலாடுதுறையில் சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இளைஞர்களை சாராய வியாபாரிகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை, மூ... மேலும் பார்க்க