செய்திகள் :

``பாலியல் புகார் கூறி ரூ.65 கோடி கேட்டு டிவி சேனலுக்கு மிரட்டல்..'' - 2 பேரை கைது செய்த போலீஸார்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் ஷாசியா நிஷார். இவர் அங்குள்ள தனியார் டிவி செய்தி சேனலில் தொகுப்பாளராக பணியற்றி பிறகு, அதிலிருந்து விலகிவிட்டார். ஷாசியா நிஷாரும், மற்றொரு முன்னாள் பத்திரிகையாளரான ஆதர்ஷ் ஷா என்பவரும் சேர்ந்து ஷாசியா பணியாற்றிய தனியார் டிவி செய்தி சேனல் அதிகாரிகளை மிரட்டி பணம் பறிக்க முயன்றனர்.

பெண் பத்திரிகையாளரான ஷாசியா நிஷார் போலி பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுப்போம் என்று கூறி மிரட்டி ரூ.5 கோடி கொடுக்கும்படி கேட்டனர். அதன் பிறகு அந்த தொகையை ரூ.65 கோடியாக அதிகரித்துவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த தனியார் டிவி சேனல் அதிகாரிகள் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். ஷாசியா நிஷார் பணம் கேட்டு மிரட்டிய ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளையும் அவர்கள் போலீஸில் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

அதோடு ஷாசியாவின் வீட்டில் சோதனை செய்தபோது அங்கு ரூ.34.50 லட்சம் பணம் இருந்தது. அதனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இரண்டு பேரையும் போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவரும் வேறு எத்தனை பேரை மிரட்டி பணம் பறித்துள்ளனர் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஷாசியா நிஷார் `பாரத் 24' என்ற டிவி சேனலில் வேலை செய்து வந்ததாகவும், அவர் வேலையில் சேர்ந்ததில் இருந்து அங்குள்ள அதிகாரிகளுக்கு எதிராக போலி பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்போவதாக கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட டிவி நிர்வாக இயக்குநர் உள்பட 3 பேர் போலீஸில் தனித்தனியாக புகார் கொடுத்துள்ளனர்.

மும்பை: ஓடும் காரில் பெண் விமானிக்குப் பாலியல் தொல்லை தந்த இருவர்; டாக்சி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை

மும்பையின் தென்பகுதியில் உள்ள போர்ட் பகுதியிலிருந்து 28 வயது பெண் பைலட் கிழக்கு புறநகரில் உள்ள தனது வீட்டிற்கு இரவு டாக்சி ஏற்பாடு செய்து சென்று கொண்டிருந்தார்.இரவு 11 மணியாகிவிட்ட நிலையில் டாக்சி வழக... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டை: குடும்ப பிரச்னையில் மனைவி, குழந்தைகள் கொலை; கணவர் வெறிச்செயல்!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுந்தரவேலு. இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் 5 மற்றும் 10 வயதில் (ஜெயதுர்கா, ஜெயலட்சுமி) ஆகிய இரண்டு பெண் கு... மேலும் பார்க்க

வால்பாறை 4 வயது குழந்தையை தூக்கி சென்ற சிறுத்தை; தேடுதல் பணியில் அதிர்ச்சி... கண்ணீரில் குடும்பம்

கோவை மாவட்டம், வால்பாறை மலைப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகள் உள்ளன. இங்கு பல ஆயிரக்கணக்கான தேயிலை தோட்டத் தொழிலாளிகள் பணியாற்றி வருகிறார்கள். அண்மை காலமாகவே அங்கு வட மாநிலங்களைச் சேர்ந்த புல... மேலும் பார்க்க

குமரி: காதலி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய இளைஞர்; கொலையா தற்கொலையா? - போலீஸ் சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவுவிளை பகுதியை சேர்ந்த துரைசாமி - தனலெட்சுமி தம்பதியரின் மகன் தனுஷ்(22). இவர் குலசேகரம் காவல்ஸ்தலம் பகுதிலுள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த... மேலும் பார்க்க

திண்டுக்கல்: இந்து முன்னணிக்கு போலீஸ் ஆதரவு? சிபிஎம் போராட்டம்; பாஜக நிர்வாகி மண்டை உடைப்பு

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக மத்திய மாநில அரசுகள் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க வலியுறுத்தி பிரசாரம் நடந்தது.இதில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின... மேலும் பார்க்க

டயப்பரில் மலம்: 8 மாத குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டு கொன்ற தாய்; நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி!

டயப்பரை அழுக்காக்கியதால் கொதிக்கும் நீரில் குழந்தையைப் போட்டு கொன்ற பெண்ணை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்தவர் ஜடோரியா ரெனே கிளீமன்ஸ் (21). இவருக்கு 8 மாத ஆண் கு... மேலும் பார்க்க