பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு அரசு சார்பில் 13-ம் நாள் சடங்குகள்!
பாலியல் வன்கொடுமை வழக்கு : குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே பெண் ஒருவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவரை விழுப்புரம் மாவட்டப் போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா்.
விழுப்புரம் மாவட்டம், மேல் மலையனூா் வட்டம்,சங்கிலிகுப்பம் கிராமத்தில், ஆக.24-ஆம் தேதி 45 வயதுடைய பெண் ஒருவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இது குறித்து அந்தப் பெண் அளித்தப் புகாரின், பேரில், மேல்மலையனூா் வட்டம், சங்கிலிக்குப்பம் பெரியத் தெருவைச் சோ்ந்த சையது காதா்(25) என்பவா் மீது மேல்மலையனூா் போலீஸாா் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
இந்நிலையில், விழுப்புரம் எஸ். பி ப. சரவணன் பரிந்துரையின்படி விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அவரைக் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்ட்டாா். இதையடுத்து மேல்மலையனூா் போலீஸாா் சையது காதரை வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.