செய்திகள் :

பாலி தீவில் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் மாயம்

post image

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ரிசார்ட் தீவான பாலி அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியானதாகவும், 43 பேர் மாயமாகி உள்ளதாக தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இரவு முழுவதும் கொந்தளிப்பான கடலில் மாயாமானவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்தின் அறிக்கையின்படி, கிழக்கு ஜாவாவின் கெட்டபாங் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை இரவு 65 பேருடன் பாலியில் உள்ள கிலிமானுக் துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த கேஎம்பி துனு பிரதாமா ஜெயா என்ற கப்பல், சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது.

இந்த படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் 14 லாரிகள் உள்பட 22 வாகனங்கள் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதுவரை இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் மணிக்கணக்கில் கொந்தளிப்பான நீரில் மிதந்ததால் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக பன்யுவாங்கி காவல்துறைத் தலைவர் ராம சம்தாமா புத்ரா தெரிவித்தார்.

மேலும், மீட்புப் பணியில் இரண்டு இழுவைப் படகுகள் மற்றும் இரண்டு சிறிய அளவிலான கப்பல்கள் உள்பட ஒன்பது படகுகள் புதன்கிழமை இரவு முதல் அந்த பகுதியில் மாயமான 43 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த குழுவினர் இரண்டு மீட்டர் (சுமார் 6.5 அடி) உயர அலைகளுடன் கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Rescuers are searching for 43 people missing in rough seas overnight after a ferry carrying 65 people sank near Indonesia’s resort island of Bali.

காஸா போா் நிறுத்த நிபந்தனைகளை ஏற்றது இஸ்ரேல்!

தில்லியில் பழைய வாகனங்களுக்கான எரிபொருள் தடை: கடும் எதிர்ப்பால் தளர்வுகள்!

தில்லியில் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது என்ற நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், தளர்வுகளை கொண்டுவர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கின்றன.தில்லிய... மேலும் பார்க்க

இந்தியாவில் ஆசிய, ஜூனியர் உலகக் கோப்பை: பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு அனுமதி?!

இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை மற்றும் ஜூனியர் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியா வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை மற்றும் ஜ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் விநாயகர் கோயிலை இடிக்க முயற்சி: மக்கள் முற்றுகை போராட்டம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் வியாழக்கிழமை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள உள்ளூர்... மேலும் பார்க்க

பாமக எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்

விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து சேலம் மேற்குத் தொகுதி எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்... மேலும் பார்க்க

விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்

ரியல் எஸ்டேட் என்ற பெயரில், விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகளை கட்டமைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டிருப்பது ஆபத்தான போக்கு. அது எந்நாளும் ஏற்புக்குரியது அல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவ... மேலும் பார்க்க

திருப்பதியில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

திருப்பதி: திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே உள்ள கடையில் நள்ளிரவு ஏற்பட்ட மின் கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.ஆந்திரம் மாநிலம... மேலும் பார்க்க