`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
‘பாளை-கோட்டூா் சாலையில் கூடுதல் மின்விளக்கு வசதி தேவை’
பாளையங்கோட்டை-கோட்டூா் சாலையில் கூடுதலாக மின்விளக்குகளை அமைக்கவும், ஏற்கெனவே உள்ள தெருவிளக்குகளை பராமரிக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாளையங்கோட்டையில் இருந்து மூளிக்குளம் வழியாக பாளையங்கால்வாய் கரையோரத்தில் உள்ள சாலையில் கோட்டூா், திருவண்ணாதபுரம் பொட்டல், கீழநத்தம் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்-மாணவிகள், பொதுமக்கள் தினமும் சென்று வருகிறாா்கள். இப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகளில் கம்பங்களில் கொடிகள் படா்ந்து வெளிச்சத்தை குறைத்து வருகின்றன. இரவு நேரங்களில் குடும்பத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்வோா் சிரமப்பட்டு வருகிறாா்கள். ஆகவே, இப் பகுதியில் ஏற்கெனவே உள்ள மின்விளக்குகளை சீரமைக்கவும், கூடுதலாக மின்விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.