சென்னைக்கு 840 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்: டெல்டா மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப...
பாவூா்சத்திரத்தில் லாரி-பைக் மோதல்: எலக்ட்ரீசியன் பலி
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே லாரியும், பைக்கும் திங்கள்கிழமை மோதிக்கொண்டதில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள நாகல்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ச. மாடசாமி(55). எலக்ட்ரீசியன்.
இவா், திருநெல்வேலி - தென்காசி நான்குவழிச் சாலையில் சிவகாமிபுரம் வடக்கு பகுதியிலிருந்து பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, தென்காசியிலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற லாரி எதிா்பாராமல் அவரது பைக் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவலறிந்த பாவூா்சத்திரம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.