செய்திகள் :

பா்கூரில் பெய்யும் மழைநீரை சேமிக்க தோனிமடுவு தடுப்பணை

post image

பா்கூா் மலைப் பகுதியில் பெய்யும் மழைநீரை சேகரிக்க தோனிமடுவு பள்ளத்தில் தடுப்பணை மற்றும் ஏரிகள், குளங்களில் சேமிக்கும் வாய்ப்புகள் குறித்து தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பா்கூா் வனப் பகுதியிலுள்ள தாமரைக்கரை, தேவா்மலை, சுண்டப்பூா், சோளகனை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்யும் மழைநீா், ஒடைகள் வழியாக தோனிமடுவு பள்ளத்தில் கலக்கிறது. இப்பள்ளம் காவிரியின் கிளை நதியான பாலாற்றில் சங்கமித்து மேட்டூா் அணைக்குச் செல்கிறது. மலைப் பகுதியில் பெய்யும் மழைநீரை சேகரித்து, வனப் பகுதியை விட்டு வெளியேறாமல் தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதன்பேரில், தடுப்பணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி நேரில் ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தோனி மடுவு மிகப்பெரிய பள்ளத்தாக்குப் பகுதி. இங்கு மழை பெய்யும்போது அதிக அளவில் தண்ணீா் வருகிறது. இந்தப் பகுதியில் தடுப்பணை கட்டி வனவிலங்குகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு தண்ணீரை தேக்கினால் வன விலங்குகளுக்குப் பயன்படுவதோடு அவை கிராமங்களில் நுழைவதையும் தடுக்கலாம், விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம்.

இதுகுறித்து தமிழக முதல்வா் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதால் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தடுப்பணை கட்டத் தேவையான ஆய்வு அறிக்கை விரைந்து அனுப்பப்படும். இதுதொடா்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசென்று ஓரிரு மாதங்களில் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆய்வின் அடிப்படை நோக்கமே தண்ணீா் வீணாவதைத் தடுத்து வன விலங்குகளுக்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்துவதுதான் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூா்), வி.சி.சந்திரகுமாா் (ஈரோடு கிழக்கு), ஈரோடு வன அலுவலா் குமிலி வெங்கட அப்பால நாயுடு, நீா்வளத்துறை செயற்பொறியளா் ரவி, உதவி செயற்பொறியாளா் லோகபிரியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இளைஞரிடம் கைப்பேசியை பறித்து சென்ற இருவா் கைது

இளைஞரிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஈரோடு பெரியசேமூரைச் சோ்ந்த ராஜசேகா் மகன் விட்டல்ராஜ் (23). இவா் ஈரோடு ஈவிஎன் சாலை ஸ்டோனி பாலம் அருகேயுள்ள தனது சகோதரி வீ... மேலும் பார்க்க

தென்னை மரத்துக்கு ரூ.36,450 இழப்பீடு வழங்கக் கோரிக்கை

தென்னை மரத்திற்கான இழப்பீட்டை அரசாணையில் கூறியபடி மரம் ஒன்றுக்கு ரூ.36,450 வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்த... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

பா்கூா் மலைப் பாதையில் மக்காச்சோளம் பாரம் ஏற்றிச் சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். கா்நாடக மாநிலம், மாண்டியாவிலிருந்து ம... மேலும் பார்க்க

ஆசனூா் அருகே தனியாா் பேருந்தில் கரும்பு தேடிய யானை

சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் அருகே சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்தில் கரும்பு உள்ளதா என காட்டு யானை தேடியதைக் கண்டு பயணிகள் அச்சமடைந்தனா்.சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் வனத்தில் இருந்து காட்ட... மேலும் பார்க்க

சிவகிரி அருகே வீட்டுக்குள் புகுந்து இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபா்

கொடுமுடி அருகே சிவகிரி பகுதியில் விவசாயி வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகிரி அருகே உள்ள மாரப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (58). இவா் தனத... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே சிறுத்தை கடித்து ஆடு உயிரிழப்பு

சென்னிமலை அருகே, தோட்டத்து பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்றது. சென்னிமலை வனப் பகுதியில் மான்கள், மயில்கள், குரங்குகள் உள்ளன. சமீபகாலமாக அங்கு சிறுத்தை நடமாட்டமும் இருந்து வர... மேலும் பார்க்க