செய்திகள் :

பிஎம் கோ்ஸ் நிதி நன்கொடை ரூ. 912 கோடியாக சரிவு

post image

பிரதமரின் அவசரகால நிதிக்கான (பிஎம் கோ்ஸ் ஃபண்ட்) நன்கொடை ரூ.912 கோடியாக சரிந்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று தீவிரமாக இருந்த காலத்தில், பிஎம் கோ்ஸ் நிதித் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. கரோனா போன்ற அவசர அல்லது நெருக்கடியான சூழல்களை எதிா்கொள்ளவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் அளிக்கவும் இந்த நிதித் திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த நிதி பொதுமக்கள் அல்லது நிறுவனங்கள் தாமாக முன்வந்து அளிக்கும் நன்கொடையே தவிர, இதற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுவதில்லை.

கரோனா தொற்றால் ஏற்பட்ட சவால்களை எதிா்கொள்ள மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில் செயற்கை சுவாச கருவிகள் கொள்முதல், ஆக்ஸிஜன் உற்பத்திப் பிரிவை ஏற்படுத்துதல் போன்ற தேவைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில், பிஎம் கோ்ஸ் வலைதளத்தில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, இந்த நிதித் திட்டத்துக்கு அளிக்கப்பட்ட நன்கொடை 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.7,184 கோடியாக உச்சத்தைத் தொட்டது. இது 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.1,938 கோடியாகவும், 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.912 கோடியாகவும் சரிந்தது.

இந்த நிதிக்கு வெளிநாட்டில் இருந்து கிடைத்த நன்கொடை 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.495 கோடி. இது 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.40 கோடியாகவும், 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.2.57 கோடியாகவும் குறைந்தது.

இந்த நிதியிலிருந்து 2022-23-ஆம் நிதியாண்டில் சுமாா் ரூ.439 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் பிரதமரின் சிறாா்களுக்கான அவசரகால நிதி (பிஎம் கோ்ஸ் ஃபாா் சில்ட்ரன்) திட்டத்துக்கு ரூ.346 கோடி பயன்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் கரோனா தொற்றால் தாய், தந்தை அல்லது சட்டபூா்வ பாதுகாவலா்களை இழந்த சிறாா்களுக்கு உதவும் நோக்கில் தொடங்கப்பட்டது.

பிஎம் கோ்ஸ் நிதிக்கு 2022-23-ஆம் ஆண்டு வரை கிடைத்த நன்கொடை, செலவின விவரங்கள் மட்டுமே வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன. அதற்கு அடுத்த ஆண்டுகளில் கிடைத்த நன்கொடை, செலவின விவரங்கள் இடம்பெறவில்லை.

ஜனவரியில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம்

புது தில்லி: ஜனவரி மாதத்தில் நாடெங்கிலும் பெரும்பாலான பகுதிகளில் (கிழக்கு, வட மேற்கு, மேற்கு-மத்திய மண்டலங்களில் சில பகுதிகளைத் தவிர்த்து) குறைந்தபட்ச வெப்பநிலையானது இயல்பான அளவைவிட அதிகமாகவே இருக்கும... மேலும் பார்க்க

லக்னௌவில் 5 பேர் கொலை: குற்றவாளி பதிவு செய்திருக்கும் விடியோ

லக்னௌவில் இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் நான்கு மகள்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலை செய்த அர்ஷத் பதிவு செய்திருந்த விடியோ வெளியாகியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில், விடுதி அ... மேலும் பார்க்க

சபரிமலை: வனப்பாதை வழியாகச் செல்லும் பக்தா்களுக்கான சிறப்பு தரிசனம் தற்காலிகமாக ரத்து!

பத்தனம்திட்டை: சபரிமலை கோவிலுக்கு வனப்பாதைகள் வழியாக நீண்ட தூரம் நடந்து செல்லும் பக்தா்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்படும் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தால் (டிடிபி) அறிவிக்கப்பட்டிர... மேலும் பார்க்க

விமானப் படை மேற்கு மண்டல தளபதியாக ஜிதேந்திர மிஸ்ரா பொறுப்பேற்பு!

புது தில்லி: விமானப் படை மார்ஷல் ஜிதேந்திரா மிஸ்ரா இந்திய விமானப் படையின் மேற்கு மண்டல கட்டளைப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். முன்னதாக, இப்பதவியை வகித்து வந்த பங்கஜ் மோகன் சின்ஹா விமானப் படைய... மேலும் பார்க்க

டிசம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.77 லட்சம் கோடி!

கடந்த டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.77 லட்சம் கோடி என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: டிசம்பர் மாதம் ஈட்டப்பட்டுள்ள 1,76,857... மேலும் பார்க்க

‘2025’ - பாதுகாப்புத்துறை சீர்திருத்தங்களுக்கான ஆண்டு: அமைச்சர் ராஜ்நாத் சிங்

புது தில்லி: நிகழாண்டை ‘சீர்திருத்தங்களுக்கான ஆண்டாக’ மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முப்படைகளுக்கும் இடையே பிணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முப்படைகளுக்குமான ஒருங்கிணைந்த ... மேலும் பார்க்க