அரசியலமைப்பை பாதுகாக்க முழுமூச்சுடன் செயல்படுவேன்: சுதர்சன் ரெட்டி
பிகாரில் ஏழைகளின் வாக்குகளை திருட அனுமதிக்க மாட்டோம்: ராகுல் காந்தி
பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்குகளைத் திருட தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பிகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பிகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்குரிமைப் பேரணியில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, நாட்டின் ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கான அனைத்து வேலைவாய்ப்பு வாய்ப்புகளையும் பாஜக தலைமையிலான மத்திய அரசு மூடிவிட்டன.
உ.பி.யில் போலி உரத் தொழிற்சாலை கண்டுபிடிப்பு
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கிய நரேந்திர மோடி அரசு, இப்போது தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் ஏழைகளின் வாக்குகளைத் திருட விரும்புகிறது.
பிகாரில் இது நடக்க இந்தியா கூட்டணி அனுமதிக்காது. அரசியலமைப்பு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமைகளை உறுதி செய்கிறது. ஆனார் சிறப்பு தீவிர திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது.
பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு பிகார் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றார்.