செய்திகள் :

பிகாரில் வெற்றி, தோல்வி அடைந்த தொகுதிகளைப் பிரித்து 243 தொகுதிகளிலும் பாஜக ஆலோசனைக் கூட்டம்!

post image

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்.டி.ஏ.) ஆகஸ்ட்டில் தொடங்கிவிட்டது. பிகாரில் அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், பிகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளிலும், கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகள்; தோல்வியடைந்த தொகுதிகள் என இரு பிரிவுகளாகப் பிரித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. அவற்றில் பாஜக மற்றும் என்.டி.ஏ. தலைவர்கள் பங்கேற்று தேர்தல் வெற்றிக்கான திட்டமிடல் மற்றும் ஆலோசனையில் ஈடுபடுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பூதகரமாக வெடித்துள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில், எதிர்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ் தலைமையில் வாக்குரிமைப் பேரணியை பிகாரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அம்மாநில முன்னாள் துணை முதல்வரும் ராஷ்திரிய ஜனதா தளம் கட்சி முக்கிய தலைவருமான தேச்ஜஸ்வி யாதவும் முன்னின்று நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முனைப்புடன் களப் பணிகளை தொடங்கியுள்ளது.

BJP, NDA launch constituency conferences in Bihar ahead of assembly elections

குஜராத்தில் உருவானது வாக்குத்திருட்டு; 2014-ல் தேசிய அளவில் பரவியது: ராகுல் காந்தி

குஜராத்தில் உருவான வாக்குத்திருட்டு 2014 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய அளவில் நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி வாக்குத்திருட்டில் ஈட... மேலும் பார்க்க

பாலியல் குற்றச்சாட்டில் எம்எல்ஏ இடைநீக்கம்: ‘பிற கட்சிகளுக்கு காங். முன்னுதாரணம்!' -வி.டி.சதீஷன்

கேரள அரசியல் வரலாற்றில் பிற கட்சிகளுக்கு காங்கிரஸ் முன்னுதாரணமாக விளங்குவதாக கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி. டி. சதீஷன் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) தெரிவித்தார். அண்மையில் மலையாள நடிகை ரினி ஆன... மேலும் பார்க்க

திவால் வழக்கில் நீதிபதி விலகல்: ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிடுமாறு அழுத்தம் வந்ததாகப் புகார்!

தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வைச் சேர்ந்த நீதிபதி சரத் குமார் ஷர்மா, ஒரு திவால் வழக்கை விசாரிப்பதிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளார்.ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிடக்... மேலும் பார்க்க

மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவனுக்கு ஜாமீன் நிராகரிப்பு!

மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவனுக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.கட்டிய மனைவியை துப்பாக்கியால் சுட்டதை நியாயப்படுத்துவதற்காக எந்தக் காரணத்தை கணவன் விளக்கினாலும் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாதென தில்லி... மேலும் பார்க்க

ஆக. 28 ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி: ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் முதல்முறையாக இருதரப்பு பேச்சு!

ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் பிரதமர் மோடி முதல்முறையாக இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றபின், எட்டாவது முறையாக ஜப்பானுக்கு அரசுமுறைப் பயணம் செல்கிறார்.... மேலும் பார்க்க

மாசுபாட்டைக் குறைக்க பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும்: ரேகா குப்தா

தலைநகர் தில்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்கவேண்டும் என்று தில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.சர்தார் படேல் வித்யாலயாவில் மாணவர்களுக்கான மின்சாரப் பேருந்துகள... மேலும் பார்க்க