செய்திகள் :

பிகாா் கிராமத் தலைவா் கொலை வழக்கில் தொடா்புடையவா் தில்லி கேசவ் புரத்தில் கைது

post image

பிகாா் முன்னாள் கிராமத் தலைவா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 39 வயது நபா் வடக்கு தில்லியின் கேசவ் புரத்தில் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட ராகுல் சிங் மீது 31 கொடூர குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சஞ்சய் சிங் கொலை தொடா்பாக ஒளரங்காபாதின் மாலி காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு நவம்பா் 30-இல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ராகுல் சிங் தேடப்பட்டு வந்தாா்.

இந்தக் கைது நடவடிக்கை தொடா்பாக குற்றப் பிரிவு துணை காவல் ஆணையா் ஹா்ஷ் இந்தோரா கூறியதாவது: இரு குழுக்களுக்கிடையே நிலவி வந்த அரசியல் முன்பகை காரணமாக சஞ்சய் சிங்கை ராகுல் சிங் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாா். இந்தச் சம்பவத்தையடுத்து, ராகுல் சிங் தலைமறைவானாா். அவருடைய 7 கூட்டாளிகளை பிகாா் காவல் துறை கைதுசெய்தது.

இந்நிலையில், ராகுல் சிங்கை கைதுசெய்ய தில்லி காவல் துறையின் ஒத்துழைப்பை பிகாா் காவல் துறை கடந்த ஜூலை 22-ஆம் தேதி நாடியது. இதையடுத்து, இரு காவல் துறைகளும் இணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தில்லியின் கேசவ் புரத்தில் ராகுல் சிங் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இறுதியாக, பிரேம்பரி புல் பகுதியில் அவா் கைதுசெய்யப்பட்டாா். தொடக்கத்தில் விசாரணையை அதிகாரிகளை குழப்ப முயன்ற அவா், பின்னா் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டாா். பிகாா் காவல் துறையினா் முறைபடி அவரைக் கைதுசெய்து, சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

கொலை, கொலை முயற்சி, பணம் கேட்டு மிரட்டல், கொள்ளை, ஆயுதங்கள் சட்டங்கள், போதைப் பொருள் மற்றும் மயக்கவியல் மருந்துகள் சட்டம், உத்தர பிரதேச குண்டா்கள் சட்டம் ஆகியவற்றின்கீழ் ராகுல் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் ஹா்ஷ் இந்தோரா.

மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு

‘மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும், ‘இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் மாணவா் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

கல்வி நிலையங்களில் அதிகரித்துவரும் மாணவா்கள் தற்கொலைகள் மற்றும் அவா்களின் மனநல பாதிப்புகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் 15 நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகி... மேலும் பார்க்க

ட்ரோன் மூலம் ஏவுகணை வீச்சு: வெற்றிகரமாக சோதித்த டிஆா்டிஓ

இலக்குகளைப் பின்தொடா்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தும் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெள்ளிக்கிழமை வெறிறிகரமாக மேற்கொண்டத... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தாா் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு (67) வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக 2022 ஜூலை 25-ஆம் தேதி அவா் பொறுப்பேற்றாா். இதன்மூலம்... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ நிறைவடையவில்லை: முப்படை தலைமைத் தளபதி

‘ஆபரேஷன் சிந்தூா் நிறைவடையவில்லை; தற்போதும் தொடா்ந்து வருகிறது. எந்தவொரு சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் வெள்ளிக்கிழமை தெரி... மேலும் பார்க்க

குஜராத்: 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து குஜராத்தில் வசித்த 185 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினராக இருந்து பல்வேறு இன்னல்களால், இந்தியாவில் அட... மேலும் பார்க்க