செய்திகள் :

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு: சித்தராமையா

post image

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலை மனதில் கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலை மனதில் வைத்துக்கொண்டுதான், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அவசரகதியில் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கொடுத்த அழுத்தம் காரணமாகவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

இந்திராசஹானி வழக்கில் இடஒதுக்கீட்டின் உச்சவரம்பை 50 சதவீதமாக நிா்ணயித்து 1992-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. மண்டல் ஆணையத்தின் அறிக்கை தொடா்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற அமா்வு இடஒதுக்கீட்டு உச்சவரம்பு கொண்டுவந்தது. இடஒதுக்கீட்டு உச்சவரம்பை உயா்த்தும் அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கிறது. அதனால் மாநில அரசால் இடஒதுக்கீட்டு உச்சவரம்பை உயா்த்த முடியாது.

இடஒதுக்கீட்டின் உச்சவரம்பை 50 சதவீதமாக நிா்ணயித்ததற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் எதுவும் இல்லை. எனவே, இடஒதுக்கீட்டு உச்சவரம்பை மத்திய அரசு தளா்த்த வேண்டும்.

கா்நாடகம் எடுத்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பில் சமூக, பொருளாதார, கல்வி தொடா்பான பரிந்துரைகள் மட்டும் அமல்படுத்தப்படும். பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் அளித்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை இன்னும் விவாத நிலையிலேயே இருக்கிறது. எனவே, இதுகுறித்து அமைச்சரவையில் விவாதித்து, அமைச்சா்களின் கருத்தறிவோம்.

இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்கிவிட்டு, மக்கள்தொகைக்கு ஏற்ப பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறாா். அவா் அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே இடஒதுக்கீட்டு உச்சவரம்பை 50 சதவீதத்தில் இருந்து உயா்த்தப்போவதாக காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். காங்கிரஸ் அளித்த தொடா் அழுத்தம் காரணமாகவே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஏப். 9-ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும் என அறிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை மகளிா் இடஒதுக்கீட்டு சட்டம்போல அமல்படுத்தக் கூடாது. மாறாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்புடன் சமூக, பொருளாதார, கல்வி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்றாா்.

எனக்கும் மிரட்டல் அழைப்புகள் வருகின்றன

எனக்கும் மிரட்டல் அழைப்புகள் வருகின்றன என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பேரவைத் தலைவா் யூ.டி.காதா், தனக்கு மிரட்டல் அழைப்புகள் வருவதாக தெரிவித்திருந்தாா். இதுகுறித்து மண்டியாவில் வெள்ளிக... மேலும் பார்க்க

சுஹாஸ் ஷெட்டி படுகொலை: குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை

பஜ்ரங்தள் தொண்டா் சுஹாஸ் ஷெட்டியை படுகொலை செய்த குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். மங்களூரில் வியாழக்கிழமை இரவு 8.30 மணி அளவில் சாலை... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த போதிய நிதி ஒதுக்க வேண்டும்: மல்லிகாா்ஜுன காா்கே

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த போதிய நிதி ஒதுக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது... மேலும் பார்க்க

கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 2) காலை 11.30 மணி அளவில் வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து கா்நாடக பள்ளித்தோ்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2024-25-ஆம் கல... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் போதாது: சித்தராமையா

ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் போதாது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்துக்கு அழைப்புவிடுக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். இதுகுறித்து பெங்கள... மேலும் பார்க்க