விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் படிப்படியாக இயக்கம்
'பிடிஆரையும் உதயநிதியையும் தராசில் வைத்து ஒப்பிடுங்கள்; அறிவார்ந்த அமைச்சரைக் கூட...' - அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று தமிழ்நாடு திரும்பினார். பின்னர் கோவை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலை பேசும்போது, “டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டிவிடும் வேலையை மாநில அரசு செய்கிறது.
ஆரம்பத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது எதிர்க்கிறார்கள். பிரச்னை என்றால் முதலிலேயே சொல்ல வேண்டும். நமக்கு தொழிற்சாலையும் வேண்டும், வேலை வாய்ப்பும் வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாப்பதும் அவசியம். தமிழகத்தில் இதை பேசும் அரசியல் கட்சிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்.
திமுக அரசியல் மேடை என்றால் ஸ்டாலின் கையில் ஒரு பேப்பர் வைத்துக் கொண்டு மத்திய அரசை திட்டுவது, வடக்கு – தெற்கு குறித்து பேசுவது, இந்தி திணிப்பு குறித்து பேசுவது என்று ஒவ்வொரு அரசியல் பார்முலாவை வைத்துள்ளனர். மிடில் கிளாஸ் மக்கள் தங்களின் குரலை உயர்த்தினால் மட்டுமே அரசியல் மாறும்.
அரசியல்வாதிகளிடம் கேள்வி கேளுங்கள். ஸ்டெர்லைட் ஆலை மூடியதால், காப்பரை ஏற்றுமதி செய்துவந்த இந்தியா, தற்போது காப்பரை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வெற்றிகரமான நடிகர் ஒருவர் அரசியலுக்கு வந்துள்ளார். தோல்விகரமான ஒரு நடிகர் துணை முதல்வராகியுள்ளார். விஜய்யின் அரசியலை நான் வரவேற்கிறேன். ஆனால் அரசியல் களம் வேறு. தற்போது கிச்சடி அரசியல் தான் டிரெண்டிங்.
வடிவேலு பாணியில் தென்னை மரத்துல ஒரு குத்து, பனை மரத்துல ஒரு குத்து. அனைத்து தலைவர்களின் படங்களை பயன்படுத்தினால் நம்மை யாரும் விமர்சிக்க மாட்டார்கள் என்ற அரசியல் கட்சியும் வந்துள்ளது. அந்த அரசியல் உலகில் எங்கும் ஜெயிக்காது.
ஒரு கட்சியில் யாரை முன்னிறுத்த வேண்டும் என்ற உரிமை அவர்களுக்கு இருக்கிறது. அதனால் மக்களுக்கு என்ன பயன் என்பதுதான் முக்கியம். பிடிஆர் போன்ற அறிவார்ந்த அமைச்சரைக் கூட அடிமையாக வைத்திருப்பதுதான் திமுக அரசியல். தனது சொந்த தொகுதியில் அவர் பணம் கொடுக்காமல் தேர்தலில் வெற்றி பெறுகிறார்.
அவரை பாராட்ட வேண்டும். அவரையும், உதயநிதியையும் தராசில் வைத்து ஒப்பிடுங்கள். எனக்கும், பிடிஆருக்கும் 1,000 கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இருப்பினும் அவரை போன்றவர்களால் ஒரு கட்சியில் புதிய சிந்தனைகள் உருவாகும்.” என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...