கனடா, பனாமா சர்ச்சை... கிரீன்லாந்தை விலைக்குக் கேட்கிறார் டிரம்ப்!
பிடிவாதத்தைக் கைவிட்டு விவசாயிகளிடம் பேசுங்கள்: மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் கோரிக்கை!
மத்திய அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அணிவகுப்பாக தில்லிக்குச் சென்றபோது பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதால் கடந்த பிப். 13 முதல் பஞ்சாபின் சம்பூ மற்றும் கனாரி நகர எல்லைப் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
இதையும் படிக்க | பிறந்த நாள் விழாவில் நிர்வாணப்படுத்தி துன்புறுத்தப்பட்ட தலித் சிறுவன் தற்கொலை!
இந்த நிலையில், மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளாஈ ஏற்கக்கோரி பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் கனாரி நகர எல்லைப்பகுதியில் கடந்த நவ. 26 முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவருடைய உண்ணாவிரதம் ஞாயிறன்று (டிச. 22) 27 நாள்களைக் கடந்த பின்னர் அவரது உடல்நிலை மிக மோசமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “மத்திய அரசு தனது பழைய பிடிவாதத்தைக் கைவிட்டு விவசாய சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அப்படி பேச முடியாதபடி மத்திய அரசு எந்தத் தவத்தில் ஈடுபடுகிறது எனத் தெரியவில்லை.
இதையும் படிக்க | அம்பேத்கர் விவகாரம்: அடித்துக் கொண்ட காங்கிரஸ் - பாஜக கவுன்சிலர்கள்!!
பிரதமர் மோடியால் ரஷியா உக்ரைன் இடையே நடைபெறும் போரை நிறுத்தமுடியும் என்றால் 200 கி.மீ தொலைவில் உள்ள விவசாயிகளிடம் பேச முடியாதா? எதற்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பகவந்த் மான் கடந்த வாரம் (டிச. 19) கூட மத்திய அரசு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவது அவர்களின் கடமை என்றும், எந்தவொரு பிரச்சினையும் உரையாடலின் மூலம் தீர்க்கப்படலாம் என்றும் வலியுறித்தியிருந்தார்.