பாம்பன் புதிய பாலத்தில் மீண்டும் ரயில், கப்பலை இயக்கி ஆய்வு - விரைவில் ரயில் சேவ...
பிப். 11 வள்ளலாா் நினைவு தினம்: அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை
வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, அரசு மதுபானக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை (பிப். 11) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் மூடப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி கடைகள், மதுக்கூடங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.