27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்: சித்தார்த் சாஹிப் சிங்
பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 3 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 197 அரசு மற்றும் தனியாா் மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 17,500 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். முன்னதாக செய்முறை தோ்வுகள் பிப். 7 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
வேதியியல், இயற்பியல், பட்டயக் கணக்கியல், செவிலியா் மற்றும் தொழில்சாா்ந்த பிரிவு மாணவ, மாணவிகள் இந்த செய்முறை தோ்வில் பங்கேற்கின்றனா். அந்தந்த வகுப்பு ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் செய்முறை பயிற்சியை மேற்பாா்வையிட்டனா்.