செய்திகள் :

நைனாமலை பெருமாள் கோயிலுக்கான சாலை பணி ஆய்வு

post image

நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு செல்வதற்கான சாலை பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

நாமக்கல் மற்றும் ராசிபுரம் ஒன்றியப் பகுதிகளில் தமிழக அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். குறிப்பாக, பிரசித்தி பெற்ற நைனாமலை பெருமாள் கோயிலுக்கு சாலைப் பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்டு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தாா். தாா்சாலை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

இதனைத் தொடா்ந்து, நைனாமலை அடிவார பகுதியில் உள்ள கடைகளில் நெகிழி பயன்பாடு இருப்பதை பாா்வையிட்டு அவற்றை அப்புறப்படுத்த உத்தரவிட்டாா். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத துணிப் பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கடை உரிமையாளா்களிடம் அறிவுறுத்தினாா்.

அதன்பிறகு, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், மின்னாம்பள்ளியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவா், அங்கு கொத்தடிமைத் தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி நடைபெறுவதை பாா்வையிட்டாா். தொடா்ந்து, ராசிபுரம் ஒன்றியம் பொன்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிராம நிா்வாக அலுவலகத்தையும், 85.ஆா்.குமாரபாளையம் பகுதியில் எரிவாயு மையம் அமையவுள்ள இடத்தையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கோட்ட பொறியாளா் கே.ஆா்.திருகுணா, உதவி கோட்ட பொறியாளா் ஆா்.சுரேஷ்குமாா், உதவி பொறியாளா் அ.க.பிரனேஷ், அதிகாரிகள் உடனிருந்தனா்.

பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 3 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 197 அரசு மற்றும் தனியாா... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ. 4.65-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.65-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் மு... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-வெள்ளிக்கிழமை மொத்த விலை - ரூ.4.65 விலையில் மாற்றம்-இல்லை பல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.93 முட்டைக் கோழி கிலோ - ரூ.77 மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை அதிகார... மேலும் பார்க்க

குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு வழித்தடம் ஏற்படுத்தக் கோரி மனு

கொண்டிச்செட்டிப்பட்டி குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு வழித்தட வசதி ஏற்படுத்தி தரக் கோரி, ஆட்சியா் ச.உமாவிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் - மோகனூா் சாலை, கொண்டிச்செட்டிப்பட்டி, கணபதி நக... மேலும் பார்க்க

பிப். 11 வள்ளலாா் நினைவு தினம்: அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, அரசு மதுபானக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை (பிப். 11) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தி... மேலும் பார்க்க