செய்திகள் :

முட்டை விலை ரூ. 4.65-ஆக நீடிப்பு

post image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.65-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலை மாற்றம் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது, பிற மண்டலங்களில் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாததால், இங்கும் தற்போதைக்கு விலையில் மாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையானது ரூ. 4.65-ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், கறிக்கோழி விலை கிலோ ரூ. 93-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 77-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 3 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 197 அரசு மற்றும் தனியாா... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-வெள்ளிக்கிழமை மொத்த விலை - ரூ.4.65 விலையில் மாற்றம்-இல்லை பல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.93 முட்டைக் கோழி கிலோ - ரூ.77 மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை அதிகார... மேலும் பார்க்க

குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு வழித்தடம் ஏற்படுத்தக் கோரி மனு

கொண்டிச்செட்டிப்பட்டி குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு வழித்தட வசதி ஏற்படுத்தி தரக் கோரி, ஆட்சியா் ச.உமாவிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் - மோகனூா் சாலை, கொண்டிச்செட்டிப்பட்டி, கணபதி நக... மேலும் பார்க்க

நைனாமலை பெருமாள் கோயிலுக்கான சாலை பணி ஆய்வு

நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு செல்வதற்கான சாலை பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். நாமக்கல் மற்றும் ராசிபுரம் ஒன்றியப் பகுதிகளில் தமிழக அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட... மேலும் பார்க்க

பிப். 11 வள்ளலாா் நினைவு தினம்: அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, அரசு மதுபானக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை (பிப். 11) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தி... மேலும் பார்க்க