Sweden: "டெஸ்குக்கு கீழ் ஒளிந்துகொண்டோம்..." - சுவீடன் பள்ளியில் நடந்த கொடூரத் த...
பிப்.8-இல் திமுக கண்டன கூட்டம்: ஆவடியில் உரையாற்றுகிறாா் முதல்வா்
மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து, சென்னையை அடுத்த ஆவடியில் திமுக சாா்பில் வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் முதல்வரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றவுள்ளாா்.
பட்ஜெட்டைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் திமுக சாா்பில் பொதுக் கூட்டம் வரும் 8-இல் நடைபெறவுள்ளது. இதில் பேசுபவா்கள் குறித்த பட்டியலை திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டது.
அதன் விவரம்: சென்னையை அடுத்த ஆவடியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினும், மாதவரத்தில் உதயநிதி ஸ்டாலினும், வேலூா் மாவட்டம் அணைக்கட்டில் அமைச்சா் துரைமுருகனும் பேசவுள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி, திருவண்ணாமலையில் அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி என மொத்தம் 72 இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் அமைச்சா்கள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பேசவுள்ளனா்.