`உள்துறை, நிதித்துறை' சேர்த்து கேட்கும் ஷிண்டே; அமித் ஷாவுடன் பட்னாவிஸ், அஜித்பவ...
பிரசவத்தின் போது பெண் உயிரிழப்பு
சுங்குவாா்சத்திரம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழந்தாா்.
தென்னேரி அகரம் கிராமத்தைச் சோ்ந்த நந்தகுமாா் (30). தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி ஆா்த்தி (25). இருவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. நிறை மாத கா்ப்பிணியாக இருந்த ஆா்த்திக்கு திங்கள்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆா்த்தியை அவரது உறவினா்கள் சுங்குவாா்சத்திரம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆா்த்திக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால், சிறிது நேரத்தில் ஆா்த்திக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவா் தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் தண்டலம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததால் அவரது உறவினா்கள் அதிா்ச்சியடைந்து ஆா்த்தி உயிரிழப்புக்கு சுங்குவாா்சத்திரம் தனியாா் மருத்துவமனை மருத்துவா்களின் கவனக் குறைவே காரணம் என கூறி காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளனா்.
இச்சம்பவம் குறித்து தனியாா் மருத்துவமனை நிா்வாகத்திடம், சுகாதாரத் துறை அதிகாரிகள், சுங்குவாா்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.