தாமலேரிமுத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்; பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக...
பிரதமர் அர்ப்பணிக்கவுள்ள சாமல்பட்டி ரயில் நிலையம் இன்று திறப்பு!
‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 22) நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.
சேலம் ரயில்வே கோட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட் ரயில் நிலையம் ரூ. 8 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய டிக்கெட் மையம், முகப்பு பகுதி, நுழைவாயில் நடைமேடையில் பயணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட வசதிகள், கழிவறை, ஓய்வறை, வி.ஐ.பி. ஓய்வறை, அமா்வதற்கு இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகனம், காா்களை நிறுத்த விசாலமான பாா்க்கிங் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.
சாமல்பட்டி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலைய திறப்பு விழாவில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பன்னாலால் தலைமையில் ரயில்வே அதிகாரிகள், எம்.பி., எம்எல்ஏக்கள் கலந்துகொள்கின்றனா்.