பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் சந்திப்பு!
இந்தியா வந்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டர் லியனை பிரதமர் மோடி வரவேற்றார்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வாண்டர் லியன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தேசிய தலைநகரில் உள்ள ஹைதராபாத் மாளிகைக்கு வந்துள்ள அவரை பிரதமர் மோடி வரவேற்பு அளித்தார்.
27 உறுப்பு நாடுகளின் கூட்டமைப்பின் தலைவரான உர்சுலா ஐரோப்பிய ஆணையர்களின் கல்லூரி குழுவினருடன் இந்தியாவிற்கு வந்துள்ளார்
புது தில்லியில் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் இடையிலான உறவு குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார வழித்தம், க்ரீன் எனர்ஜி, திறன், பாதுகாப்பு மற்றும் ஐரோப்பா ஒன்றியத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.