செய்திகள் :

பிரதமர் மோடியுடன் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

post image

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் குறித்து கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, சுக்லாவை பாராட்டினார்.

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப்பயணம் மேற்கொண்ட பின் சுபான்ஷு சுக்லா, முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இந்தியா திரும்பினார்.

இந்தியா வந்தடைந்த சுபான்ஷு சுக்லா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

விண்வெளிக்கு இந்திய வீரா்களை அனுப்பும் ‘ககன்யான்’ லட்சியத் திட்டத்துக்குத் தோ்வு செய்யப்பட்ட 4 வீரா்களில் ஒருவா் லக்னெளவை சோ்ந்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா (39).

இவா், அனுபவ பயிற்சி நோக்கங்களுக்காக அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல கடந்த ஆண்டு தோ்வானாா்.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நாசா விண்வெளி மையத்தில் இருந்து ‘ஃபால்கன் 9’ ராக்கெட் மூலம் ‘டிராகன் கிரேஸ்’ விண்கலத்தில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி புறப்பட்ட இவா்கள், 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு மறுநாள் சா்வதேச விண்வெளி நிலையத்தை பாதுகாப்பாக அடைந்தனா்.

18 நாள்கள் சா்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுக்லா உள்ளிட்ட நால்வரும் உயிரி மருத்துவ அறிவியல், நரம்பணுவியல், வேளாண்மை, விண்வெளித் தொழில்நுட்பம் எனப் பல்வேறு பரிமாணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு ‘டிராகன் கிரேஸ்’ விண்கலம் மூலம் பூமிக்கு ஜூலை 15-ஆம் தேதி பாதுகாப்பாக திரும்பினா்.

PM Modi meets Shubhanshu Shukla, first Indian astronaut to visit Space Station

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.இன்று(ஆக. 18) இது குறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கான திட்டம் குறித்து விரிவான ஆலோசனை நடத்தியதாகவ... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவையும் விடமாட்டீர்களா? விமர்சிக்கும் காங்கிரஸ்!

சுபான்ஷு சுக்லாவை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் ஈட்ட முற்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா விமர்சித்துள்ளார். ராஜீவ் சுக்லா பேசியதாவது: “தேர்தல் ஆணையத்துக்கு எதிரான எங்களுடைய போராட்டம் தொடரும். பி... மேலும் பார்க்க

3-ஆவது திருமணத்துக்குப் பின் காதலனுடன் ஓடிய இளம்பெண்: பேத்தியைக் கொன்று வீசிய தாத்தா - பாட்டி!

3-ஆவது திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் அதன்பின் தனது காதலனுடன் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத்தொடர்ந்து, அந்தப் பெண்ணின் 6 வயது மகளை, பெண்ணின் பெற்றோர் கொன்று வீசிய கொட... மேலும் பார்க்க

‘சிஸ்டம் கெட்டுப்போச்சு!’ பிகாரிலும் இந்தியாவிலும் மிக மோசமான சூழல்! -லாலுவின் மகன் விமர்சனம்

பிகாரிலும் இந்தியாவிலும் மிக மோசமான சூழல் நிலவுவதாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் விமர்சித்துள்ளார். ‘எமர்ஜென்ஸி காலத்தைவிட மோசமான சூழல் இப்போது நாட்டில் நிலவுகிறது’ என்று ராஷ்திரிய ஜனத... மேலும் பார்க்க

சுங்கச் சாவடியில் ராணுவ வீரரை கட்டி வைத்து அடித்த இளைஞர்கள்! 6 பேர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியில் ஏற்பட்ட தகராறு காரணமாக ராணுவ வீரரை அங்குள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விடியோ இணையத்தில் பலர... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து விடியோ வெளியிட்ட நவீன் பட்நாயக்!

ஒடிஸா முன்னாள் முதல்வரும் பிஜு ஜனதா தள கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் மருத்துவமனையில் இருந்தவாறு இன்று (ஆக. 18) விடியோ வெளியிட்டுள்ளார். சிகிச்சைக்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையி... மேலும் பார்க்க