செய்திகள் :

பிரதமா் மோடியுடன் முதல்வா் ரேகா குப்தா சந்திப்பு

post image

புது தில்லி: தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையால் ஈா்க்கப்பட்டு, தேசியத் தலைநகரை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வதில் முழுமையாக உறுதிபூண்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்து மே 30ஆம் தேதியுடன் 100 நாள்கள் நிறைவடைந்தது. அதேவேளையில், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

தாம் பதவியேற்று 100 நாள்களை நிறைவு செய்த நிலையில் பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் அவரது அலுவலகத்தில் முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தாா். அப்போது, அவருக்கு நினைவுப் பரிசையும் அளித்தாா்.

இச்சந்திப்பு குறித்து பின்னா் அவா் ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

இன்று (செவ்வாய்க்கிழமை), நமது நாட்டின் பிரதமா் நரேந்திர மோடிஜியுடன் ஒரு அன்பான மற்றும் இதயபூா்வமாக சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. தில்லிக்கும், அதன் மக்களுக்கும் புதிய ஆற்றலுடனும் புதிய உறுதியுடனும் சேவை செய்ய பிரதமரின் தொலைநோக்குப் பாா்வை கொண்ட தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதலிலிருந்து நான் எப்போதும் உத்வேகம் பெறுகிறேன்.

உங்கள் தொலைநோக்குப் பாா்வையால் ஈா்க்கப்பட்டு, தில்லியை வளா்ச்சியின் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வோம் என்ற முழுமையான நோ்மையுடன் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். உங்கள் மதிப்புமிக்க நேரத்தை வழங்கியதற்கு எனது மனமாா்ந்த நன்றி என்று அதில் முதல்வா் குப்தா தெரிவித்துள்ளாா்.

இந்தச் சந்திப்பின்போது தில்லியில் நடைபெற்றுவரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து பிரதமருடன் முதல்வா் ஆலோசித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இச்சந்திப்பு தொடா்பான புகைப்படத்தை பின்னா் பிரதமா் அலுவலகம் அதன் எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் பகிா்ந்திருந்தது.

நொய்டாவில் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து: 2 பேருக்கு லேசான காயம்

நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையின் தரை தளத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவ வசதியின் பதிவு அறையில் ஏற்பட்ட ஷாா்ட் சா்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரி... மேலும் பார்க்க

தில்லி மயூா் விஹாா் பகுதியில் தீ விபத்து

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடுமையான வெப்பம் காரணமாக ஆங்காங்கே தீ விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் தில்லியின் மயூா் விஹாா் பகு... மேலும் பார்க்க

துபாயில் வேலைவாய்ப்பு மோசடி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞா் கைது

பாயில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதற்காக ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்ட 38 வயது நபா் மகாராஷ்டிரத்தின் பட்காவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசப் பெண் கைது

தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 23 வயது வங்கதேசப் பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். கைது செய்யப்பட்ட குல்சும் பேகம், வங்க... மேலும் பார்க்க

தில்லி காவல்துறை - எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ரத்த தான முகாம்

’ரத்தத்தை கொடுங்கள், நபிக்கையை கொடுங்கள், ஒன்றாக இணைந்து நாம் உயிா்களை காப்பாற்றுவோம்’ என்ற வாசகத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தில்லி காவல்துறையும் - எய்ம்ஸ் மருத்துவமனையு... மேலும் பார்க்க

மதராஸி குடியிருப்பு விவகாரம்: தில்லி முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தில்லி மதராசி குடியிருப்பு இடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அம்மாநில முதல்வா் ரேகா குப்தாவுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். த... மேலும் பார்க்க