பிரபல சின்ன திரை நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, நித்யா மேனன்!
பிரபல சின்ன திரை நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஆடல், பாடல் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும், நீயா நானா என்ற விவாத நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கின்றனர். நீனா நானா நிகழ்ச்சி டிஆர்பியிலும் முன்னிலையில் உள்ளது. இந்நிகழ்ச்சி கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது.
நீயா நானா நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் 18 ஆண்டுகளாகத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு அவர் பிரதான காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சி, குறிப்பிட்ட விவகாரத்தை முன்வைத்து அதை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என இரு வேறு மக்கள் விவாதம் செய்யும் நிகழ்ச்சியாக எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு தலைப்புகளில் விவாதம் நடைபெறும்.
இந்த வாரம் சண்டைக்கோழிகளாக இருக்கும் கணவன்கள், மனைவிகள் என்றத் தலைப்பை முன்வைத்து நீயா நானா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 27) பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக தலைவன் தலைவி படத்தின் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இவர்கள் பங்கேற்றுள்ளதால், விஜய் சேதுபதி, நித்யா மேனன், பாண்டிராஜ் கூறும் கருத்துகளைக் கேட்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதனால் இந்நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: பாக்கியலட்சுமி தொடருக்கு மாற்றாக ஒளிபரப்பாகும் புதிய தொடர்!