செய்திகள் :

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபர் கைது!

post image

காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரளத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்தி மார்ச் 29 அன்று கொச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, மன்னுத்தி நெடுஞ்சாலை அருகே இரவு 9.30 மணியளவில் பிரியங்கா காந்தியின் பாதுகாப்பு வாகனத்தை கேரள யூடியுபரான அனீஷ் ஆபிரஹாம் என்பவர் மறித்துள்ளார்.

பிரியங்கா காந்தியின் வாகனத்துக்கு முன் சென்ற பாதுகாப்பு வாகனம் தொடர்ந்து ஹாரன் அடித்ததால் அதனை மறித்து தனது காரை அவர் நிறுத்தியுள்ளார்.

அவரைக் காவல்துறையினர் அங்கிருந்து கிளம்புமாறு கூறியதைத் தொடர்ந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு வாகனத்தை மறித்தது, உயிருக்கு ஆபத்து விளைவிக்குமாறு வாகனம் ஓட்டியது, காவல்துறையினரிடம் அத்துமீறியது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் அனீஷ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். மேலும், அவரது காரையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

கைதான மறுநாள் அவர் ஜாமீனில் வெளியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிக்க | சபரிமலை கோயிலில் நாளை நடை திறப்பு: 18 நாள்கள் திறந்திருக்கும்!

இந்தியாவில் கல்வி நிறுவனங்களை தொடங்க 50 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் யுஜிசி ஒப்புதலுக்கு விண்ணப்பம்

இந்தியாவில் கல்வி நிறுவனங்களை தொடங்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்புதலுக்கு 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் விண்ணப்பித்துள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் த... மேலும் பார்க்க

பாஜக புதிய தலைவா் தோ்வில் தாமதம்: அகிலேஷ் கிண்டல் - அமித் ஷா பதிலடி

பாஜக புதிய தலைவா் தோ்வில் நிலவும் தாமதத்தைக் குறிப்பிட்டு, மக்களவையில் அக்கட்சியை கிண்டல் செய்த சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதிலடி கொடுத்தாா். ‘அடுத்த ... மேலும் பார்க்க

சுனிதா வில்லியம்ஸுக்கு ‘பாரத ரத்னா’: நாடாளுமன்றத்தில் திரிணமூல் எம்.பி. கோரிக்கை

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை விடுத்... மேலும் பார்க்க

சுங்கச்சாவடி வசூல்: ரூ. 7,060 கோடி வருவாயுடன் உ.பி. முதலிடம்

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கடந்த நிதியாண்டில் உயா் வருவாயை வசூல் செய்த மாநிலங்களில் உத்தர பிரதேசம் முதலிடம் வகிப்பது தெரியவந்துள்ளது. சுங்கச்சாவடி வசூல் தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய... மேலும் பார்க்க

பழங்குடியின மாணவா்களுக்கான 245 ஏகலைவன் பள்ளிகள் செயல்படவில்லை: மத்திய அரசு

நாட்டில் பழங்குடியின மாணவா்களுக்கான 245 ஏகலைவன் பள்ளிகள் செயல்படாமல் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் குழு தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எழுப்பிய க... மேலும் பார்க்க

குடியேற்றம், வெளிநாட்டவா் வருகையை முறைப்படுத்தும் மசோதா: நாடாளுமன்றம் ஒப்புதல்

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவா் இந்தியா வருகையை முறைப்படுத்தும் மசோதா எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கிடையே மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. ‘குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவா் மசோதா 2... மேலும் பார்க்க