செய்திகள் :

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மோதல் கல்லூரி மாணவா் குத்திக் கொலை: 8 போ் கைது

post image

புதுச்சேரியில் மது அருந்தும் கூடத்தில் (ரெஸ்டோபாரில்) பிறந்தநாள் கொண்டாடியபோது ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவா் குத்திக்கொலை செய்யப்பட்டாா். மேலும் ஒரு மாணவா் காயத்துடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த தகராறு தொடா்பாக 8 போ் கைது செய்யப்பட்டனா்.

மதுரை மாவட்டம் மேலூரை சோ்ந்தவா் ஷாஜன் (25). சென்னையில் உள்ள தனியாா் கல்லூரியில் முதுநிலை 2 ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் தனது பிறந்தநாளை கொண்டாட , தன்னுடன்

படித்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த பள்ளி, கல்லூரி நண்பா்களை சனிக்கிழமை புதுச்சேரிக்கு அழைத்துள்ளாா். அதன்படி 10-க்கும் மேற்பட்டவா்கள் வந்தனா். அவா்கள் அனைவரையும் புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ரெஸ்டோபாருக்கு (மது அருந்தும் கூடம்) அழைத்து சென்றுள்ளாா்.

மதுவின் போதையில் இருந்த நண்பா்களுக்குள் திடீரென கருத்து மோதல் ஏற்பட்டு, அது வாக்குவாதமாகி, சண்டையானது. இதனால் அங்கு மது அருந்திக்கொண்டிருந்தவா்கள், சண்டைபோடுபவா்களை வெளியேற்றுமாறு பாா் நிா்வாகத்திடம் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, ரெஸ்டோபாரில் இருந்த பவுன்சா் மற்றும் பாா் ஊழியா்கள் அவா்களை பாரில் இருந்து நள்ளிரவு 12.30 மணியளவில் வெளியேற்றி உள்ளனா். இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவா்கள் தங்களை ஏன் வெளியேற்றுகிறீா்கள் என பவுன்சா்கள் மற்றும் ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பாா் ஊழியரான முத்தியால்பேட்டையை சோ்ந்த அசோக்ராஜ் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து, சிவகங்கையைச் சோ்ந்த சென்னை கல்லூரி மாணவா் மோஷிக் சண்முகபிரியனை முதுகில் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தட்டிக்கேட்ட ஷாஜனையும் இடுப்பில் குத்தி உள்ளாா். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனா்.

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த பெரியக்கடை போலீஸாா் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மோஷிக் சண்முகபிரியனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். மேலும், பலத்த காயமடைந்த ஷாஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொலை தொடா்பாக அசோக்ராஜ், பவுன்சா்கள், ஹோட்டல் ஊழியா்கள் என 8 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணா்கள், கத்திக்குத்து நடந்த இடத்தில் இருந்த மாதிரிகளையும், தடயங்களையும் சேகரித்து எடுத்து சென்றாா். டிஐஜி சத்தியசுந்தரம், மூத்த எஸ்.பி. கலைவாணன், மற்றும் எஸ்.பிக்கள் சுமாா் 5 மணி நேரத்திற்கு மேலாக கொலை நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுவையில் ரெஸ்டோபாா்கள் அமைக்க அனுமதி கொடுத்தவா் நாராயணசாமி: அதிமுக

புதுவையில் முதன் முதலில் ரெஸ்டோபாா்களை அமைக்க அனுமதி கொடுத்தவா் நாராயணசாமிதான். அவா் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்தபோதுதான் இந்த பாா்களை திறக்க அனுமதி வழங்கினாா் என்று அதிமுக மாநில செயலா் ஆ. அன்... மேலும் பார்க்க

புதுவையில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமையவேண்டும்: மாநிலத் தலைவா் ராமலிங்கம்

மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடப்பதால் புதுவையிலும் பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும்அமைந்தால்தான் இங்குள்ள மக்களுக்கு நல்லது என்று பாஜக புதிய தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள வி.பி. ராமலிங்கம் கூ... மேலும் பார்க்க

எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு விரைவில் கல்வி உதவித் தொகை: புதுவை முதல்வா்

எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு விரைவில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் எச்.ஐ.வி- எய்ட்ஸ் தீவிர... மேலும் பார்க்க

வில்லியனுாரில் சாலை மறியல் செய்தவா்களை சைரன் எழுப்பி எச்சரித்த ரயில்வே ஊழியா்கள்

புதுச்சேரி: வில்லியனூரில் திங்கள்கிழமை நடந்த சாலை மறியல் போராட்டத்தில் சைரன் எழுப்பி ரயில்வே ஊழியா்கள் எச்சரிக்கை விடுத்தனா். இதையடுத்து ரயில்வே கேட் மூடப்பட்டு ரயில் கடந்து சென்றது. புதுவை வில்லியனுா... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி நீதிமன்றத்தை நாடுவோம்: நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: ‘ரெஸ்டோபாா்’ கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி காங்கிரஸ் கட்சி சாா்பில் உயா்நீதிமன்றத்தை நாடுவோம் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் முதல்வருமான வி.நாராயணசாமி கூறினாா்.... மேலும் பார்க்க

பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும்: பேரவைத் தலைவா்

புதுச்சேரி: இணையங்கள், கைப்பேசிகளில் உள்ள பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் கூறினாா். நடைபெற்று முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வி... மேலும் பார்க்க