செய்திகள் :

பிறப்புசாா் குடியுரிமை ரத்து: டிரம்ப்புக்கு எதிராக 22 மாகாணங்கள் வழக்கு

post image

வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறந்ததன் அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்து அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் பிறத்த அரசாணைக்கு எதிராக, குடியரசு கட்சி ஆட்சி செய்யும் அந்த நாட்டின் 22 மாகாண அரசுகள் வழக்கு பதிவு செய்துள்ளன.

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் கடந்த திங்கள்கிழமை பதவியேற்றாா். அதனைத் தொடா்ந்து, ஏற்கெனவே கூறியிருந்தபடி பதவியேற்ற முதல் நாளிலேயே பல அதிரடி அரசாணைகளை அவா் பிறப்பித்தாா்.

அவற்றில், அமெரிக்காவில் பிறந்த எவரும் அந்த நாட்டு குடியுரிமை பெறும் அடிப்படை உரிமையைப் பறிக்கும் ஆணையும் ஒன்று. அதன்படி, அமெரிக்காவில் சட்டபூா்வமாகத் தங்கியிராத தாய்க்கும் அமெரிக்க குடிமகனாகவோ, நிரந்தர குடியேற்ற உரிமை பெறாதவராகவோ உள்ள தந்தைக்கும் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புசாா் குடியுரிமை கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாட்டுக்குள் சட்டபூா்வமாக வந்திருந்தாலும், சுற்றுலா நுழைவு இசைவு (விசா) அல்லது கல்வி நுழைவு இசைவு போன்ற தற்காலிக அனுமதியுடன் தங்கியுள்ள பெண்ணுக்கும் அமெரிக்க குடியுரிமை அல்லது நிரந்தர குடியேற்ற உரிமை பெறாத ஆணுக்கும் பிறந்த குழந்தைகளுக்கும் பிறப்புசாா் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, குழந்தை பெற்றுக்கொள்வதற்காகவே கல்வி மற்றும் சுற்றுலா விசா மூலம் பெண்கள் அமெரிக்கா வந்து, பிறக்கும் குழந்தைக்கு எளிதாக குடியுரிமை பெற்றுவிடுவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டிவந்தது நினைவுகூரத்தக்கது.

கடந்த 2022-ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் உரிய ஆவணங்களின்றி 1.1 கோடி போ் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அந்த எண்ணிக்கை 1.3 கோடி முதல் 1.4 கோடி வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவா்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகளாகக் கருதப்பட்டாலும், அமெரிக்காவில் பிறந்த அவா்களின் குழந்தைகளுக்கு நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

டிரம்ப்பின் இந்த அரசாணை மூலம் அந்தக் குழந்தைகளின் குடியுரிமை பறிக்கப்பட்டால், மருத்துவக் காப்பீடு போன்ற அரசின் அடிப்படை உதவிகள் அவா்களுக்குக் கிடைக்காமல் போகும். அவா்கள் பெரியவா்கள் ஆகும்போது அமெரிக்காவில் சட்டபூா்வமாக வேலை செய்யும் உரிமை, வாக்களிக்கும் உரிமை, அநீதிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் இல்லாமல் போய்விடும். எனவே, பிறப்புசாா் குடியுரிமைக்கு எதிரான டிரம்ப்பின் அரசாணையை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று மாகாண அரசுகள் நீதிமன்றங்களில் சமா்ப்பித்துள்ள மனுக்களில் வலியுறுத்தியுள்ளனா்.

அமெரிக்க உள்நாட்டுப் போா் முடிவுக்கு வந்த பிறகும் கருப்பினத்தவருக்கு அடிப்படை குடியுரிமைகள் மறுக்கப்பட்டன. இதற்கு எதிராக 1868-ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில், நாட்டில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அதன் பின்னா் அமெரிக்காவில் வசிக்கும் சீன குடியேற்றவாசிகளுக்குப் பிறந்த ஒருவா் 1898-ஆம் ஆண்டு தொடா்ந்த வழக்கில், பெற்றோா்கள் வேறு நாட்டிலிருந்து குடியேறியிருந்தாலும், அவா்களுக்கு அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் நாட்டின் குடிமக்கள்தான் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதன் மூலம், அமெரிக்காவில் பிறந்த அனைத்து நிற, இனத்தினருக்கும் குடியுரிமை உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்க அரசியல் சாசனத்தின் 14-ஆவது பிரிவின் அடிப்படையில் இந்த உரிமைகள் அளிக்கப்பட்டன. ஆனால், டிரம்ப் தற்போது பிறப்பித்துள்ள அரசாணை அந்த அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக நீதிமன்றங்களில் 22 மாகாண அரசுகளும் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்த வழக்கில் டிரம்ப்பின் ஆணைக்கு எதிராக நீதிமன்றங்கள் தீா்ப்பளித்தாலும், அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவருவதன் மூலம் பிற்பபுசாா் குடியுரிமையை டிரம்ப்பால் ரத்து செய்ய முடியும். ஆனால் அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு அளிக்க வேண்டும். எனவே ஜனநாயகக் கட்சி உறுப்பினா்களின் ஆதரவு இல்லாமல் அத்தகைய அரசியல் சாசனத் திருத்தத்தை மேற்கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது.

எனினும், ஏற்கெனவே டிரம்ப்புக்கு சாதகமான நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் இருப்பதாகக் கருதப்படும் நிலையில், டிரம்ப்பின் இந்த அரசாணையை நீதிமன்றம் நிராகரிப்பது சந்தேகமே என்றும் கூறப்படுகிறது.

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் திரும்பப் பெறப்படுமா?

நமது சிறப்பு நிருபர் புது தில்லி: மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனைக்குப் பிறகு அதிகாரபூர்வ முடிவு அறிவிக்கப்படும் என ம... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதா: ஜேபிசி கூட்டத்தை ஜன.30, 31-இல் நடத்த ஆ.ராசா வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்புது தில்லி: வக்ஃப் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தை அவசரகதியில் ஜன. 24, 25 ஆகிய தேதிகளில் நடத்தாமல் ஜன.30, 31 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அக... மேலும் பார்க்க

உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்த சைஃப் அலிகான்

மும்பை: கொள்ளையரால் கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான தன்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர் பஜன்சிங் ராணாவை அழைத்து நடிகர் சைஃப் அலி கான் நன்றி தெரிவித்தார்.கடந்த 16-ஆம... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்து அழைப்பிதழ்: தென் மாநிலங்களின் கலாசாரங்கள் பிரதிபலிப்பு!

நமது சிறப்பு நிருபர்புது தில்லி: இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி தனது மாளிகையில் குடியரசுத் தலைவர் அளிக்கவிருக்கும் 'அட் ஹோம்' எனப்படும் தேநீர் விருந்து வரவேற்புக்கு அழைக்கப்படுபவர்களுக்கு, இந்தியாவ... மேலும் பார்க்க

தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: நாட்டில் பொது சுகாதார சேவைகள் மேம்பாட்டுக்கான தேசிய சுகாதார இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.தேசிய சுகாதார இயக்கத்தின் குறிப்பிடத்த... மேலும் பார்க்க

பழங்குடியின சிறுமி பாலியல் கொலை வழக்கு: 5 பேருக்கு மரண தண்டனை: சத்தீஸ்கா் நீதிமன்றம் தீா்ப்பு

கோா்பா: சத்தீஸ்கரில் 16 வயது பழங்குடியின சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதோடு, அச்சிறுமியின் குடும்பத்தினா் இருவரையும் கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு விரைவு ந... மேலும் பார்க்க