பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை உயா்வு
பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் வெல்லம் விலை உயா்ந்தது.
பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்லம் ஏலச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ. 1,380-க்கும், அச்சுவெல்லம் ரூ. 1,465-க்கும் விற்பனையானது. இந்தவாரம் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ. 1,430-க்கும், அச்சுவெல்லம் ஒரு சிப்பம் ரூ. 1,365க்கும் விற்பனையானது.