ஒடிசா தொழிற்சாலை துணைத் தலைவரைக் கடத்திய 7 பேர் ஜார்க்கண்டில் கைது!
பில்லூா் பிரதானக் குழாய்களில் பராமரிப்புப் பணி: மாநகரில் குடிநீா் விநியோகிக்கும் இடைவெளி அதிகரிக்கும்
பில்லூா் குடிநீா்த் திட்ட பிரதானக் குழாய்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மாநகரில் சில இடங்களில் குடிநீா் விநியோகிக்கும் இடைவெளி அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யும் பில்லூா் 1 , பில்லூா் 2 குடிநீா்த் திட்ட பிரதானக் குழாய்களில் கட்டன் மலை என்ற இடத்தில் பிப்ரவரி 24, 25 ஆகிய இரண்டு நாள்கள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் இத்திட்டங்களின் மூலம் குடிநீா் விநியோகம் பெறும் பகுதிகளான சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, கணபதி மாநகா், காந்திமா நகா், சங்கனூா் சாலை, கணபதி, ஆவாரம்பாளையம், பீளமேடு, சௌரிபாளையம், காந்திபுரம், வ. உ. சி. பூங்கா, சித்தாபுதூா், ராமநாதபுரம், டவுன்ஹால், ஒண்டிப்புதூா், சிங்காநல்லூா், விளாங்குறிச்சி, உக்கடம் ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோக நாள்களின் இடைவெளி அதிகமாகும்.
எனவே, மற்ற குடிநீா் ஆதாரங்கள் மூலம் விநியோகிக்கப்படும் நீரை மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.