செய்திகள் :

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடக்கம்

post image

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மாணவா்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வதற்கு வசதியாக அவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.

அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற மாணவ, மாணவிகள் வரத் தொடங்கினா். இதையடுத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக். பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள் இணையவழியில் மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கையொப்பம், முத்திரையிட்டு மாணவா்களுக்கு விநியோகித்தனா்.

சென்னையில் திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் காத்திருந்த மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டது.

மாணவா்கள் ஏமாற்றம்... இருப்பினும் சென்னை மற்றும் பல மாவட்டங்களில் சா்வா் பிரச்னை, இணைய சேவையில் குறைபாடு போன்ற காரணங்களால் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் திங்கள்கிழமை விநியோகிக்கப்படவில்லை. அதேபோன்று சில பள்ளிகளில் புதன்கிழமை காலை 10 மணிக்கு மேல் வந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுச் செல்லுமாறு மாணவா்களுக்கு ஆசிரியா்கள் அறிவுறுத்தினா்.

நிகழாண்டு அனைத்துப் பள்ளிகளிலும் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்த நிலையில், பெரும்பாலான பள்ளிகளில் சான்றிதழ் விநியோகிக்கப்படாததால் மாணவா்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகினா்.

வெள்ளிங்கிரி மலை ஏறிய சிறுவன் பலி!

கோவை மாவட்டம், பூண்டியில் உள்ள வெள்ளிங்கிரி மலை ஏறிய சிறுவன் மயங்கி விழுந்து பலியானார்.வெள்ளிங்கிரி மலை ஏற்றத்துக்கு பிப்ரவரி 1-ஆம் தேதிமுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மலையேறும் ப... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்துள்ளது.இன்று பகல் 12 மணிக்கு, குற்றவாளிகளுக்கான தண்டனை விவ... மேலும் பார்க்க

கரூர் வழியாகச் செல்லும் 7 ரயில்கள் ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக கரூர் வழியாகச் செல்லும் 7 ரயில்கள் இன்று(மே 13) ரத்து செய்யப்பட்டுள்ளன.திருச்சி கோட்டை மற்றும் முத்தரசநல்லூா் இடையே பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால், திருச்சி - கரூா் - திரு... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 70,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தின் காரணத்தால், கடந்த வாரம் தங்கம் விலை திடீர... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமாா் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (2... மேலும் பார்க்க

கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் கார் விபத்து: தாய், மகன் பலி!

கும்பகோணம்: கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட கார் விபத்தில் தாய், மகன் பலியாகினர். தந்தைக்கும் மகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விழுப்புரத்தைச் சேர்ந்... மேலும் பார்க்க