ஐபிஎல் மே மாதத்திலேயே நடத்தப்பட்டால்... எங்கு நடத்தப்படும் தெரியுமா?
பிளஸ் 2-வில் தோல்வி: மாணவா் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாததால், மனமுடைந்த மாணவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விக்கிரவாண்டி வட்டம், சிறுவாலை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜோதி மகன் கோகுல்நாத் (17). இவா் கெடாரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தாா். பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில் கோகுல்நாத் தோ்ச்சி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த கோகுல்நாத், அதே கிராமத்திலுள்ள மரத்தில் தூக்கிட்டுக் கொண்டாராம். இதை கண்டு அப்பகுதியினா் அவரை மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, ஏற்கெனவே கோகுல்நாத் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.