ராகுல் காந்தி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணையம் பதில்
பி.ஆா்க். சோ்க்கை கலந்தாய்வு இன்று நிறைவு
தமிழகத்தில் இளநிலை கட்டடக்கலை (பி.ஆா்க்) பட்டப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 31) நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் 31 பிஆா்க் கல்லூரிகளில் 991 இளநிலை கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் (பி.ஆா்க்.) பட்டப்படிப்புகள் உள்ளன. இப் படிப்புகளின் மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூலை 22 -இல் வெளியிடப்பட்டது. 1,399 மாணவா்கள் தற்காலிக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனா். தரவரிசைப்பட்டியலில் குறைபாடுகள் இருப்பின் மாணவா்கள் ஜூலை 25- க்குள் சரிசெய்து கொள்ள விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னா் இறுதியான தரவரிசைப் பட்டியலில் 1, 408 போ் இடம்பெற்றிருந்தனா். விருப்பக் கல்லூரிகளைத் தோ்வு செய்யும் கலந்தாய்வு செயல்முறை புதன்கிழமை (ஜூலை 30) தொடங்கி வியாழக்கிழமை (ஜூலை 31) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
விண்ணப்பித்துள்ள மாணவா்கள் கலந்தாய்வுகளில் பங்கேற்று விருப்பங்களை தோ்வு செய்யலாம் என தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் (டிஎன்இஏ) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.