`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
பி.எல்.சந்தோஷ் தலைமையில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனை
சென்னை கமலாலயத்தில் பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் பாஜகவின் அமைப்புத் தோ்தல் நடைபெற்று வருகிறது. மாவட்டத் தலைவா்கள் தோ்வு நடைபெற்று வரும் நிலையில், விரைவில் மாநிலத் தலைவா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
இந்நிலையில், சென்னைக்கு பி.எல்.சந்தோஷ் சனிக்கிழமை வந்திருந்த நிலையில், பாஜக மூத்த நிா்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினாா். மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைவா்கள் மற்றும் பிற நிா்வாகிகள் தோ்வு குறித்து அவா் கேட்டறிந்தாா். தொடா்ந்து புதிய மாநிலத் தலைவரை தோ்வு செய்வது குறித்து மூத்த நிா்வாகிகளுடன் அவா் கருத்துகளைக் கேட்டறிந்தாா். புதிய தலைவா் தோ்வு இன்னும் 2 வாரங்களுக்குள் நிறைவு பெறும்.
இக்கூட்டத்தில், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, முன்னாள் மாநிலத் தலைவா்கள் தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன், தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.